வயநாடு நிலச்சரிவு… பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவரண பொருட்களை அனுப்பி வைத்த அமைச்சர்.மு.பெ.சாமிநாதன்..!
கேரள மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக வயநாடு மாவட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர்
மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர் இந்நிலையில் கேரள மக்களுக்கு உதவிடும் வகையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதிப்பிலான துணி, அரிசி, பற்பசை, நாப்கின், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு இரண்டு வாகனங்கள் மூலம் கேரளா மாநிலம் வயநாடு பகுதிக்கு தமிழக செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர். மு.பெ. சாமிநாதன், மாவட்ட ஆட்சித் தலைவர். கிறிஸ்துராஜ் ஆகியோர் மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர். கா. செல்வராஜ், மாநகராட்சி மேயர்.தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர்.பவன் குமார் கிரியப்பவனார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
-பவானி கார்த்திக்