வயநாடு நிலச்சரிவு… பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவரண உதவி வழங்கிய பிரபாஸ்..!
கடந்த 29ஆம் தேதி பெய்த அதீத கனமழை காரணமாக 30தேதி அதிகாலை கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பல கிராமங்கள் உருகுலைந்துள்ளன. இதனால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிரமங்கள் இருந்த தடயமே இல்லாமல் போனது.
பல்வேறு இடங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்து செல்லபபட்டன. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். இவர்களை தேடும் பணி தொடரந்து நடப்பெற்று வருகிறது நாளுக்கு நாள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் வீடுகளை இழந்த 1000க்கும் மேற்பட்ட மக்கள் பதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை அளிக்குமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளதை தொடர்ந்து, நடிகர் விக்ரம் முதல் ஆளாக முன்வந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், நடிகர் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் இணைந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சம் வழங்கியுள்ளனர்.
பிரபாஸ் நிதியுதவி:
டோலிவுட் வட்டாரத்தில் அதிகப்படியாக சிரங்சிவி மற்றும் ராம்சரண் 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கிய நிலையில் நடிகர் பிரபாஸ் தற்போது 2 கோடி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-பவானி கார்த்திக்