“மது ஒழிப்பில் நாங்க பி.எச்டி.. திருமாவளவன் எல்.கே.ஜி..” அன்புமணி ராமதாஸுக்கு திருமாவளவன் பதிலடி..!!
மது ஒழிப்பில் நாங்கள் பி.எச்டி படித்திருக்கிறோம், திருமாவளவன் இப்போதுதான் எல்.கே.ஜி படிக்கத் தொடங்கியிருக்கிறார் என்று கூறிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் நிதானமாக பதிலளித்துள்ளார்.
மதுரை விமானநிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ் “முதல்வரின் அமெரிக்க பயணத்தை முடித்து வந்துள்ளார்., மேடைக்கு மேடை மதுவின் தீமையை பற்றி கனிமொழி எம்.பி வருகிறார்.. ஆனால் குறைந்த அளவிலான மதுக்களை மட்டுமே ஒழிதுள்ளார்கள்..
அதிக அளவில் போதை பொருட்களால் புழங்கி வரும்நிலையில் அதை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது ஆனால் அதை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்..
தமிழக இளைஞர்கள் மது., கஞ்சா., குட்கா போன்ற போதை பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.. இது மிகவும் மோசமான சூழல், இதனை கண்டிக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் “உடனடியாக மதுவிலக்கு கொள்கை அமல்படுத்துங்கள்., காலக்கெடு கொடுத்து மதுக்கடைகளை மூடுங்கள்., இளைஞர்களை காப்பாற்றுங்கள்., மதுவை விட மோசமான சூழல் போதை பொருட்கள். போதைப்பொருட்கள் எங்கே பார்த்தாலும் கிடைக்கிறது அதை ஒழிக்க அடுத்த கட்ட நடவடிக்கைக்கு கொண்டு செல்ல வேண்டும்..
பாமக ஒரு சமூக நீதிக்காக துவங்கப்பட்ட கட்சி., மது ஒழிப்பு போராட்டத்தில் பங்கேற்ற 15 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பெண்கள் சிறைக்கு சென்று இருக்கிறார்கள். ஆனால் திருமாவளவன் தன்னுடைய மது ஒழிப்பு மாநாட்டிற்கு எத்தனை பெண்களை போராட்டத்திற்காக அழைத்துள்ளார். மது ஒழிப்பில் நாங்கள் பி.எச்.டி., படித்துள்ளோம். ஆனால் இப்போது தான் திருமாவளவன் எல்.கே.ஜி., முடித்துள்ளதாக பாமக அன்புமணி ராமதாஸ் இவ்வாறே பேசினார்..
அதற்கு திருமாவளவன் நச் பதிலடி கொடுத்துள்ளார் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் விசிகவுக்கும் தனக்கும் எதிராக அபாண்டமான அவதூறுகள் திட்டமிட்டு பரப்பப்பட்டதாகவும் தேசிய அளவில் பா.ஜ.க சிறுபான்மை வெறுப்பை ஏற்படுத்தியது போல, தமிழகத்தில் சிறுபான்மை அரசியலை பேச முடியாது என்பதால் தலித், தலித் அல்லாதவர் என்று பிரித்து வெறுப்பு அரசியலை விதைத்தது பாமக தான் என பதில் அளித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..