மாற்றங்களை கொண்டுவரவே நீதித்துறையில் பழமையான சட்டங்களை நீக்கினோம்…! பிரதமர் நரேந்திர மோடி

சர்வதேச நீதித்துறை மாநாடு டெல்லியில் இன்று காலை தொடங்கியது அதில் கலந்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பல்வேறு துறைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதுபோலவே நீதித்துறையிலும் மாற்றங்கள் கொண்டு வர, அரசு பழமையான சட்டங்களை நீக்கியது என்று கூறினார்.

சட்டமே சமூகத்தின் முக்கிய அங்கம் என்றும் நாட்டில், சட்டமே அனைத்திற்கும் மேலானது என தெரிவித்த பிரதமர் மோடி உண்மை, சேவைக்காக வாழ்ந்த காந்தியின் வாழ்க்கை நீதித்துறையின் அடித்தளமாக கருதப்படுகிறது என்று கூறினார்

சமீபத்தில் இந்தியாவில் சில வெளியான தீர்ப்புகள் உலக அளவில் பேசுபொருளாக அமைந்தன. இந்த தீர்ப்புகள் (அயோத்தி வழக்கு உள்ளிட்டவை) வெளியாகும் முன்பாக, அவை மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று பேசப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்புகள் வெளியான போது 130 கோடி மக்களும் முழுமனதுடன் ஏற்றுக் கொண்டார்கள்,வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான சமநிலையின் தீவிரத்தை புரிந்து கொண்ட இந்திய நீதித்துறைக்கு நன்றி என்று பிரதமர் மோடி பேசினார்.

What do you think?

கொரோனா வைரஸ் உயிரிழப்பு 2,345 ஆக அதிகரிப்பு

Mi Electric Tooth brush தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது