ADVERTISEMENT
கண்களை பாதுகாப்பாக வைத்திருக்க வழிமுறைகள்..!
-
கண்களை பாதுகாக்க வேண்டும் எனில் நாம் இயற்கையாக கிடைக்ககூடிய கீரை வகைகளை வாரத்திற்கு இரண்டு முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பழங்கள், முட்டை, மீன் போன்ற தாதுக்கள் வைட்டமிங்கள் நிறைந்த உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
-
நாம் பயணம் செய்யும் போது படிப்பதை தவிர்க்க வேண்டும். நல்ல வெளிச்சமாக இருக்கும் இடத்தில் படிக்க வேண்டும்.
-
நாள் ஒன்றில் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் இடையில் கண்களை சிறிது மூடி ஓய்வெடுத்து திறக்க வேண்டும். இது கண்களின் தசைகளை தளர்த்தி கண் அழுத்தம் குறைய உதவியாக இருக்கும்.
-
வெயிலில் வெளியில் செல்லும் போது கண்களுக்கு சன் கிளாஸ் கண்ணாடி அணிய வேண்டும். கைகளால் கண்களை அடிக்கடி தொடுதல் கூடாது.
-
வெளியில் செல்லும் போது காற்று அதிகமாக வீசினால் கண்களை பாதுகாக்க கண்ணாடி அணிதல் வேண்டும்.
-
அன்றாடம் குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்தால் கண் ரத்த அழுத்தம் குறைந்து, கண்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
-
அன்றாடம் 8 மணி நேரம் கட்டாயமாக உறங்க வேண்டும்.இது கண்களுக்கு ஓய்வாக இருக்கும்.
-
மது அருந்துதல் மற்றும் புகைப் பிடித்தல் போன்ற பழக்கங்கள் கண்களுக்கு தீங்கு அளிக்கக் கூடியவை.
-
நீண்ட நேரம் டிவி பார்ப்பது, கணினி பயன்படுத்துவது மற்றும் மொபைல் கண்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
-
ஆண்டுக்கு ஒரு முறை கண்களை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும், அப்போது தான் கண்களுக்கு வரும் நோயை கண்டறிந்து ஆரம்ப காலத்திலேயே சிகிச்சை அளித்து குணமாக்க முடியும்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.