“விரைவில் வருவோம் தக்க பதில் தருவோம்” சீண்டி பார்த்த தவெக..! கடுப்பான திமுக..! உதயநிதி ஸ்டாலின் சொன்ன ஒரு வார்த்தை..!!
தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகள் ஒரு சிலர் செய்த செயல் இன்று திமுகவினர் இடையே கடும் கோபத்தை தூண்டியுள்ளது.. தவெகவிற்கு பதிலடி கொடுக்க நினைத்த திமுக இளைஞரணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரே ஒரு வார்த்தையில் தடுத்து நிறுத்தியுள்ளார்..
பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்த துணை முதலமைச்சர் பதவி கடந்த செப்டம்பர் 28-ந்தேதி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 29ம் தேதி அமைச்சரவையும் மாற்றியமைக்கப்பட்டது..
துணை முதலமைச்சர் பதவி என்பது அரசியலமைப்பு ரீதியான பதவி இல்லை எனவே துணை முதலமைச்சர் என்கிற அந்தஸ்தை உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்கும் போது அது குறித்து அறிவிப்புகள் வெளியானால் மட்டுமே போதுமானது ஆளுநர் பதவி ஏற்பு செய்துவைக்க தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் முதலமைச்சர் இல்லாத சமயத்தில் அந்த இடத்தில் இருந்து அனைத்து முடிவுகளையும் துணை முதலமைச்சர் மேற்கொள்ள முடியும்..
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் அவருக்கென., செயலாளர்கள் நியமனம் செய்ய வேண்டும். அந்த செயலாளர் பதவிகென்று கூடுதல் தலைமைச் செயலாளர்கள் பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முதன்மைச் செயலாளர்களாக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் லாபி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்., திமுகவினர் பலரும் தமிழகம் முழுவதும் பட்டாசுக்கள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி தீர்த்தனர்..
அதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்..
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் சிலர்., நடிகரும் தலைவருமான தளபதி விஜய் லியோ ஆடியோ லாஞ்சில் பேசிய வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்., அதாவது அந்த #அப்பா சட்டை என்ற வீடியோ வைரலாக பரவிய நிலையில் திமுகவிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த திமுக இளைஞர் அணியினர் மற்றும் திமுக ஐடிவிங் அது தளபதி விஜயின் அனுமதியில்லாமல் இது நடந்திருக்காது.. நீங்க பதிலடி மட்டும் கொடுங்க நாங்க எல்லாத்தையும் பார்த்துக்கிறோம் என உதயநிதி ஸ்டாலினிடம் முறையிட்டுள்ளனர்..
ஆனால் அதற்கு டென்சன் ஆகாத உதயநிதி, எந்த பதிலடியும் தர வேண்டாம்.. நீங்க இதை இப்படியே விடுங்க நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார்..
இதற்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மற்றறொரு அறிக்கை வெளியாகியுள்ளது அதில் அவர்கள் குறிபிட்டிருப்பதாவது., “விரைவில் வருவோம் தக்க பதில் தருவோம்” என்ற தவெக சார்பில் கூறியிருப்பது இன்னும் சர்ச்சையை கிளப்பியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..