ரம்ஜானுக்கு நாங்க இதை கொடுப்போம்..!! ஏ.சி.சண்முகம் கொடுத்த கிப்ட்..?
வேலூர் மாவட்டம், ஆர் என்பாளையம் பகுதிகளில் புதிய நீதிக்கட்சி சார்பில் இஸ்லாமிய மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் வகையில் 2 கிலோ பாஸ்மதி அரிசி, இஞ்சி, பூண்டு, வெங்காயம் மற்றும் மாசாலா பொருட்கள் அடங்கிய பையினை புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வழங்கினார். இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் பெற்று சென்றனர்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மக்களுக்காக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது அதில் பல்லாயிரம் கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். அதன் பின் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தியதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். மேலும் பல்வேறு சேவைகளை செய்யவுள்ளதாகவும் அவர் பேசினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..