காசிமேட்டில் களைகட்டும் மீன் சந்தை..!! குறைந்த விலையில் மீன்கள்..!!
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்த மீனவர்கள் அனைவரும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலையிலேயே வீடு திரும்பியுள்ளனர். 450க்கும் மேற்பட்ட மீனவர்கள் அதிக எடையுள்ள ராட்சத மீன்களை பிடித்து விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர்.
450க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைக்கு திரும்பியதால் இன்று காசிமேடு மீன் சந்தையில் அதிக அளவில் மீன்கள் விற்பனைக்காக வந்துள்ளது. மீன்களை வாங்குவதற்கு ஏராளமான மீன் பிரியர்கள் காசிமேடு மீன் சந்தையில் குவிந்துள்ளனர்.
பல விதமான மீன்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதால் ஏராளமான பொது மக்கள் அங்கு வந்துள்ளனர். கடந்த வாரம் மீன்களின் விலை 50 ரூபாய் முதல் 150 ரூபாய் விற்பனை செய்யப்பட்டது. முக்கியமாக வஞ்சிரம், சங்கரா, மற்றும் ஷீலா மீன்கள் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 100 வரை குறைந்துள்ளது. மீன்கள் விலை குறைந்து இருப்பதால், மீன் பிரியர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த வாரத்தை விட இந்த வாரம் கூடுதல் மீன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மீன்கள் விற்பனை மட்டுமின்றி ஏலமும் விடப்பட்டுள்ளது. வியாபாரிகள் மொத்தமாகவும் சில்லறை விலைக்கும் வாங்கி சென்றுள்ளனர்.