“22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்..”
ரூ 22 கோடி மதிப்பில் 4 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
ஈரோடு பிளாட்டினம் மஹாலில் இன்று கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 4 ஆயிரம் பேருக்கு ரூ.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
ஈரோடு, கரூர் மாவட்டங்களிலுள்ள 382 ஊராட்சிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து ஈ.வி.கே.எஸ் .இளங்கோவன் எம்.எல்.ஏ உள்பட 50 பயனாளிகளுக்கு பட்டா வழங்கினார். மேலும் மகளிர் குழுவினருக்கும் கடன் உதவி வழங்கினார். மேலும் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த ஆய்வக புதிய கட்டிடம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு மூலம் வேலைவாய்ப்பு வழங்க வந்த கோரிக்கை மூலம் முதற்கட்டமாக 100 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளோம். இந்தியாவில் விளையாட்டு துறை என்றால் அது தமிழ்நாடு.
கிராமங்களில் இருந்து அதிக விளையாட்டு வீரர்கள் வரவேண்டும் என்பதற்காகவே கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம் தொடங்கியதாகவும் , மக்களின் கோரிக்கைகைய நிறைவேற்றுவது தான் திமுக அரசின் நோக்கம் என்றும் . மக்களுக்கு உழைக்க முதல்வர் தயாராக உள்ளதாகவும் , திமுக அரசின் சாதனைகளுக்கு பொதுமக்கள் தான் சிறப்பு தூதர்களாக உள்ளனர் என்று அவர் கூறினார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கயல்விழி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..