மேற்குவங்கம் இரயில் விபத்து..! விபத்திற்கான காரணம்..! உயிர் இழப்பு எண்ணிக்கை…?
மேற்கு வங்கத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது.. இந்த கோர இரயில் விபத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் ரங்காபாணி ரயில் நிலையம் அமைந்துள்ளது.
சிலிகுரி ரயில் நிலையத்தை கடந்து நிஜ்பாரி ரயில் நிலையம் அருகே ரங்காபாணி ரயில் நிலையத்தை நோக்கி கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுள்ளது.
அப்போது சிக்னலுக்காக இந்த ரயில் இன்று காலை தண்டவாளத்தில் நின்றுள்ளது.
அப்போது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த மற்றொரு சரக்கு ரயில் முன்னாள் நின்றிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறத்தில் மோதியது.
இதில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 ரயில் பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. இந்த பெட்டிகளில் இருந்த 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும் படுகாயம் அடைந்த பலர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புப் பணியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்..
இந்த விபத்து குறித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி வருத்தம் தெரிவித்துள்ளார்..
மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீட்புப்படையினர் தற்போது மீட்புப்பணிகளை துவங்கி மேற்கொண்டு வருகின்றனர். பலர் ரயில் பெட்டிகளில் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை உயரும் அச்சம் உருவாகியுள்ளது.
-லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..