நீ என்ன பெரிய ஆளா..? மீண்டும் அஜித்தை விமர்சனம் செய்த மாணிக்கம் நாரயணன்..!கடுப்பில் அஜித் ரசிகர்கள்….!
மாணிக்கம் நாரயணன் :
பல வெற்றிபடங்களை தயாரித்து வந்த மாணிக்கம் நாராயணன் தயாரிப்பதில் இருந்து விலகி ஓய்வெடுத்து வந்தார்.தற்போது இவர் தனியார் யூடியூப் சேனல்களுக்கு தொடர்ந்து பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந் ஒரு நல்ல அம்மாவே கிடையாது என கூறி அதிர்ச்சி ஏற்படுத்திய இவர் அஜித்க்கு இதயம் இருகிறதா என விமர்சித்திருந்தார்.
தற்போது அஜித் மேல் என்ன கோபத்தில் இருகிறார் என்று தெரியவில்லை மீண்டும் விஜயை பாரட்டியும் அஜித்தை கடுமையாக விமர்சனமும் செய்துள்ளார்.
விஜய் நல்லவன் :
விஜய் ரொம்ப நல்லவன் விஜயை பொருத்தவரை அவருக்கு தன்னடக்கம் உண்டு. அவர் தான் பெரிய ஆள் என்பது போலலெல்லாம் பேசமாட்டார்.
லியோ படத்திற்காக, இந்தியா முழுக்க புரமோஷன் செய்ய வேண்டும் என்று சொன்னால் கூட, அவர் செய்வார்.
விஜயுடன் டீல் செய்வது என்பது மிகவும் ஈஸி. அவருக்கு எந்த விஷயத்தையும் பேசி புரிய வைத்து விடலாம் என பாராட்டியுள்ளார்.
அஜித்துக்கு அது கிடையாது :
அஜித் மாபெரும் நடிகர். வாழ்கையில் அவர் நடிப்பார்.. படத்தில் அவருக்கு நடிக்கத் தெரியாது. சும்மா வந்து அப்படி, இப்படி என நடிப்பார் அவ்வளவுதான்.
95ஆம் காலக்கட்டங்களில் அவர் என்படத்தில் நடிப்பதாக கூறி அட்வான்ஸாக என்னிடம் பணம் கேட்டார். நான் கொடுத்தேன். ஆனால் தற்போது வரை நடிக்கவும் இல்லை பணமும் திருப்பி கொடுக்க வில்லை. நான் கேட்டதுக்கு எனக்கு டேட் தருவதாக கூறினார் .
ஆனால் தரவே இல்லை. மனிதனுக்கு வாக்கு முக்கியம் அஜித்திடம் அது கிடையாது என காட்டமாக கூறியுள்ளார்.
அஜித் பைத்தியகாரன் :
விஜயை பார்க்க பார்க்க முடியவில்லை என்று யாராவது சொல்கிறார்களா..? சிலர் ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள்.. சிலரெல்லாம் படம் நடித்ததோடு சென்று விடுகிறார்கள்.
புரமோஷனெல்லாம் வருவதே இல்லை. அவனெல்லாம் பைத்தியக்காரன். ஒரு படத்தில் நடிக்கிறான். அந்தப்படத்தை படக்குழுவோடு சேர்ந்து புரமோஷன் செய்வதை விட, உனக்கு என்ன பெரிய வேலை.
அப்படியென்றால் என்ன ஹீரோ நீ.. உன்னை படங்களுக்கு யாரும் புக் செய்யக்கூடாது. ரஜினி, கமல் அவர்கள் நடிக்கும் படத்தின் புரமோஷனுக்கு வருகிறார்கள்..
நீ என்ன அவர்களை விட பெரிய ஆளா..? என்று பேசினார்.. இந்த வீடியோ அஜித் ரசிகர்களின் சாபத்தை பெற்று வருகின்றது.
– பவானி கார்த்திக்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..