அவனின்றி நான் ஏது – பகுதி 1
காதல் எவ்வளவு அழகானது என்று சொன்னாலும் சில சமயங்களில் நம்மை அழ வைப்பதும் காதல் தான்.., காதலில் எத்தனை ரகம்..? பார்த்தவுடன் காதல், நட்பில் தொடங்கிய காதல், பள்ளி பருவ காதல்., மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் காதல்.., இப்படி எத்தனையோ இருக்குங்க..
ஆனா இந்த காதல் கதை கொஞ்சம் வித்தியாசமானது..? என்னனு கேட்குறீங்களா சொல்லுறாங்க..
நம்ப கதையில வர ஹீரோவ பத்தி சொல்லனும்னா யாரிடமும் சரியாக பேசமாட்டார். அமைதியான ஆளு, ஆனா உண்மையா இருக்குறவங்களுக்கு என்ன வேணாலும் செய்ய கூடிய ஆளு.
நம்ப ஹீரோயின் அப்படியே நேர் மாறு..? ரொம்ப ஹைப்பர்., ஆனா ஜாலி டைப்.
ஒருநாள் நம்ப ஹீரோயின் முதன் முதலாக Facebook கணக்கு தொடங்கினாள். அவளுக்கு அந்த அளவிற்கு பெருசா பயன்படுத்த தெரியாமல் தனது தோழியிடம் கேட்டால், தோழியின் பெயர் எப்சிபா அவங்க சொல்லிக்கொடுத்த படி ஹீரோயின் அதை பயன்படுத்த தொடங்கினால்..
இருங்க ஹீரோயி்ன் பெயரே சொல்லமல் இருக்க. அவள் பெயர் நந்தினி.. பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தால். செமஸ்டர் பரிட்சை தொடங்கியதால் நந்தினி கொஞ்ச நாட்களா போன் பயன்படுத்தாமல் இருந்தாள். அந்த நேரத்தில் தான் நம்ப ஹீரோ கார்த்திக் முகநூலில் அவளது புகைப்படத்திற்கு தொடர்ந்து லைக்ஸ் மழையை பொழிந்தார்..
ஆனால் நந்தினி போன் பயன்படுத்தாமல் இருந்ததால் அவளுக்கு எதுவும் தெரியவில்லை. நாட்கள் நகர்ந்து மாதங்கள் ஆனது. பரிட்சையும் முடிந்து நந்தினி முகநூலை திறக்கிறால். திறந்த உடன் நிறைய மெசேஜ், லைக்ஸ் என குவிந்து இருந்தது.
யாரு இவ்வளவு மெசேஜ் அனுப்பி உள்ளார்கள் என்று பார்த்தால் நம்ப ஹீரோ கார்த்தி நந்நினிக்கு தினமும் ஒரு க விதை எழுதி அனுப்பியுள்ளார்.
அந்த கவிதை என்னனா..?
1. தாஜ்மஹால் போன்ற அழகை கொண்டவளே..!
ஷாஜகான் காலத்தில் நீ இல்லை..!
இருந்திருந்தால்
அவன் தாஜ்மஹாலை கட்டாமல்
உன்னை கட்டியிருப்பான்..!
காதல் தேனை கொட்டியிருப்பான்..!!
2. அவளின் கூந்தல் நறுமணமா..?
உலகப் பூக்கள் நறுமணமா..?
எவையென்று தெரியத்
தேர்தல் கேட்டன பூக்கள்
தேர்தல் தேவையில்லை
“தோல்வி உனக்கே என்றேன்”
பூக்களிடம்..!!
யாருடா இந்த பையன் நம்பள பத்தி இப்படி எல்லாம் கவிதை எழுதி அனுப்பி இருக்கான்..? அப்படினு யோசிச்சுட்டே கார்த்தியின் கவிதைகளுக்கு, நந்தினி நன்றி என மெசேஜ் அனுப்பியிருந்தாள்.
நந்தினியின் மெசேஜ்காகவே காத்திருந்த கார்த்தி காத்திருந்ததை வைத்து இன்னொரு கவிதை அனுப்புகிறான்.
“கடவுளே
கன்னி மனதைக் கண்டறியும்
கருவியொன்று செய்யக்
காதல் விஞ்ஞானியை அனுப்பிடு..!
கடவுள் அனுப்பிய
காதல் விஞ்ஞானியை..!
கன்னியின் மனதில் வைக்கும்
ஒலிபெருக்கி ஒன்றை செய்திடு..!
அப்போதாவது அவள் நினைப்பது
கேட்கிறதா என பார்க்கலாம்..!
இந்த கவிதைகளை வைத்தே நந்தினியிடம் காதலை கூறுகிறான். நந்தினி மறுக்க மனமுடைந்து போகிறான் “கார்த்தி” சில நாள் முகநூல் பக்கமே வரமல் போனான். என்னடா முதல் கதையிலேயே காதல் தோல்வியா என நீங்க யோசிக்கலாம்.
ஆனா நந்தினி மனசுல என்ன இருக்குனு தெரியமா நம்ப எப்படி இதை தோல்வி எடுத்துக்க முடியும்..? ஒரு வேலை நந்தினி சொல்லி இருப்பாளோ..? இல்லை சொல்லாம இருந்து இருப்பாளா..? என்னனு அடுத்த கதையில படிக்கலாம்.
– பவானி கார்த்திக்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..