அவனின்றி நான் ஏது – பகுதி – 5
கார்த்தியும், நந்தினியும் முதன்முதலாக கோவிலில் சந்தித்தனர். கார்த்தியை பார்த்தவுடன், “சரி பாத்தாச்சுல.. நான் வீட்டுக்கு போறேன்” என்று கூறினாள். ஆனால், அவளை சிறிது நேரத்திற்கு தன்னுடன் இருக்க வைக்க ஆசைப்பட்ட கார்த்தி, “ஏய் உங்க அண்ணன் வரான்.. வா.. வந்து பைக்ல ஏறு.. நாம பக்கத்துல இருக்க பார்க்குக்கு போலாம்” என்று கூறினான்.
அதனை கேட்டு, உண்மையிலேயே அண்ணன் வரவில்லை என்பதை உணர்ந்தாலும், கார்த்தியுடன் சில நிமிடங்கள் செலவழிக்கலாம் என்று நினைத்த நந்தினி, சிரித்துக் கொண்டே கார்த்தியின் பைக்கில் ஏறினாள்.
பின்னர், இருவரும் பைக்கில் ஏறி அப்பகுதியில் இருந்த பூங்காவிற்கு சென்றனர். வழக்கமான , சாப்பிட்டாயா, என்ன பண்ணிட்டு இருந்த, என்ன மிஸ் பண்ணியா போன்ற கேள்விகளை நந்தினி கேட்டுக்கொண்டு இருந்தாள்.
ஆனால், காதலியை முதன்முறை பார்த்த ஆசையிலும, அவளை யாரேனும் பார்த்துவிடுவார்களா என்ற பயத்தில் துருத்துருவென மேய்ந்து கொண்டிருந்த அவளின் கண்கள் என அவனை ஈர்த்ததால் முதல் சந்திப்பிலேயே அவளது கண்ணத்தில் முத்தம் கொடுத்துவிடுகிறான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தினி, அங்கிருந்து கிளம்பிவிடுகிறாள். அவள் செல்லும்போது, அவளையே பார்த்துக் கொண்டிருந்த கார்த்தி, தன்னை தவறாக நினைத்துக் கொண்டிருப்பாளோ என்று அவன் வருந்தினான். நந்தினி வீட்டிற்கு சென்று 2 நாட்கள் ஆன பிறகும், அவளிடம் இருந்து செல்போன் அழைப்பு வரவில்லை. தனது இந்த காதலும், முறிந்துவிட்டதோ என்று எண்ணி, செல்போனை பார்த்து காத்துக் கொண்டே அவன் நொடிகளை யுகங்களாக கடந்துக் கொண்டிருந்தான்..
– பவானி கார்த்திக்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..