அவனின்றி நான் ஏது- பகுதி-6
இரண்டு நாட்களாக நந்தினியின் அழைப்புக்காக காத்திருந்த கார்த்தி, நந்தினியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்கிறான்.
அப்போது அவளது அண்ணனின் குரல் கேட்டதும், அதிர்ச்சி அடைந்த கார்த்தி, தனது அக்காவிடம் செல்போனை கொடுத்து, அவளது தோழி போல், பேச வைக்கிறான்.
நந்தினியின் அண்ணன் சரவணன் பேசும்போது, “யாரு நீங்க..”, கார்த்தியின் அக்கா செல்வி, “அண்ணா நான் நந்தினியோட காலேஜ்மேட்.. ஒரு டவுட்டு எனக்கு.. அவகிட்ட கேக்கணும்” என்று சொல்கிறாள்.
“இவளே சரியா படிக்க மாட்டா.. இவக்கிட்ட போய் டவுட்டு கேக்குறாளே..” என்று மனதில் நினைத்துக் கொண்டு, தனது தங்கையிடம் செல்போனை கொடுக்கிறான் சரவணன்.
பின்னர், நந்தினி செல்போனை வாங்கி பேசியபோது, “சொல்லு டி” என்று சொல்ல, மறுமுனையில் கார்த்தி பேசினான்.
அவனது குரலை கேட்டு பதறிய நந்தினி, “ஏய் வீட்ல எல்லோரும் இருக்காங்க.. கட் பண்ணு டா..” என்று கூறினாள். அதற்கு, “நீ எதுக்கு 3 நாளா கால் பண்ணல..” என்று கார்த்தி கேட்டான்.
இதற்கு, “ஏய் எனக்கு உடம்பு சரியில்ல டா.. காலேஜ் கூட போகல.. அதான் ஃபோன் பண்ண முடியல” என்று சொன்னாள். இவளது விளக்கத்தை கேட்டதும் நிம்மதி அடைந்த கார்த்தி, “ஐ லவ் யூ டி” என்று சொல்கிறான்.
அதற்கு பதில் ஏதும் சொல்லாத நந்தினி, சிரித்துக் கொண்டே செல்போனை அமர்த்திவிடுகிறாள். பின்னர், உற்சாகம் அடைந்த கார்த்தி, அடுத்த நாள் அவளை காண்பதற்கு காத்திருந்தான்…,
மறுநாள் என்ன நடந்தது இருவரும் என்ன பேசிகொண்டார்கள் என்பதை அடுத்த கதையில் பார்க்கலாம்….