அவனின்றி நான் ஏது- பகுதி 8
தனது வருங்கால மாமியாரை பார்க்க போகிறோம் என்ற பதற்றத்துடன் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் கார்த்திக்காக காத்திருந்தாள். வெகுநேரம் ஆகியும் வராததால் கார்த்தி செல்போனுக்கு அழைப்பு விடுத்தாள்.
தூக்கத்தோடு கார்த்தி போன் எடுத்து, ”ஹாலோ…….” -னு இழுக்குறான். ”என்ன இங்க நிற்க வெச்சிட்டு நீ தூங்கிட்டு இருக்கியா”-னு சத்தம் போடவும் அப்போதான் அவன் நினைவுக்கே வந்தது, அவளை வர சொன்னது .
”ஐயோ… சாரி டி 10 நிமிசத்துல அங்க இருப்ப”-னு சொல்லிட்டு போன் வைக்கிறான். பின்னர் 7 நிமிடத்திலேயே அங்கு வந்த கார்த்தி பைக்கில் நந்தினியை அமர வைத்து அவளின் காலை பிடித்துவிடுகிறான். ”என்ன டா அக்கறை எல்லாம் ரொம்ப பலமா இருக்கே என்ன வேனும்”-னு நந்தினி கலாய்த்து கொண்டே கூற,
கார்த்தி ”என் பொன்டாட்டி எவ்ளோ நேரம் ரோட்ல எனக்காக நின்னுச்சி.. அதுக்காக தான்.. கால் வலிக்கும்-ல உனக்கு”-னு சொல்லிட்டு பைக்கை எடுத்து அவனது மாமா வீட்டிற்கு கூட்டிட்டு போகிறான்.
அங்கு போனதும் நந்தினிக்கு வேர்வை சொட்ட பயத்தோடு ஒரு பதற்றம். வாசலில் கார்த்தியோட அக்கா, தம்பி நிற்க நந்தினியை வீட்டிற்குள் அழைத்து செல்கின்றனர்.
வீட்டின் உள்ளே கார்த்தியின் அம்மா,அப்பா,மாமா,மாமி,பாட்டி என ஒரு பெரிய கூட்டமே இருக்கிறார்கள். இதெல்லாம் பார்த்த நந்தினி ”நான் வீட்டுக்கு போற” -னு குழந்தை மாதிரி சொல்லி அழுகிறாள்.
அனைவரும் உடனே விழுந்து விழுந்து சிரிக்க கார்த்தியின் அம்மா ”எதுக்கு என் மருமகளை பார்த்து சிரிக்கிறிங்க”-னு கூறி, நந்தினியிடம் ”பயப்படாத நங்க எல்லாரும் உன் குடும்பம் தான் கார்த்தி என்னோட முதல் பையன்.. அதே மாதிரி நீ தான் இந்த வீட்டோட முதல் மருமகள்” என கூறியதும் நந்தினிக்கு சரியான சந்தோஷம்.
அந்த குடும்பத்தை மிகவும் பிடித்து போன நந்தினி சிறிது நேரம் கழித்து எல்லாரிடமும் சகஜமாக பேச தொடங்கினாள்.
அடுத்து என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்..