எந்த அம்மனிற்கு என்ன நேர்த்திக்கடன்..! ஆன்மீக குறிப்பு – 1
பொதுவாக நாம் செய்யும் பரிகாரம் நம் பிரச்னைகளை தீர்த்துவைக்கும் என சொல்லுவார்கள்.., நாம் செய்த பரிகாரம் நம் பிரச்சனைகள் மற்றும் நோய்களை குணமாக்கி விட்டதா..? எந்த தெய்வத்திற்கு என்ன மாதிரியான நேர்த்திக்கடன்கள் செலுத்தலாம் என இந்த குறிப்பில் பார்க்கலாம்.
தாலி காணிக்கை :
சீர்காழிக்கு பக்கத்தில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் “தில்லை விடங்கன்” என்ற திருத்தலம் அமைந்துள்ளது. தேவார மூவரில் ஒருவராக தில்லைவிடங்கன் மாரிமுத்து பிள்ளை பிறந்த ஊர் பழமை வாய்ந்த இத்திருத்தலத்தில் விடங்கேஸ்வரன் காட்சி தருகிறார்.
தில்லைநாயகி அம்மன் திருமண தடைகளை நீக்கி தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு எல்லாம் மாங்கல்ய வரன் அளிக்கிறார். திருமணதடை உள்ளவர்களுக்கு தில்லைநாயகி அம்மனை வழிபட்டு சென்றவுடன் மாங்கல்ய வரன் தேடி வருமாம்.
அவருடன் திருமணம் முடிந்த பின் தம்பதிகளாக வந்து தாலியை காணிக்கையாக செலுத்தினால் போதும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்து இருக்குமாம்.
ராகு – கேது தோஷங்கள் :
சிதம்பரம் வீரபத்திரர்சாமி ஆலயத்தில் கல்யாணி கதம்ப வனவாசியாக காட்சி தரும் இந்த அம்மன் மிக விசேஷமான பலன்களைத் தரக் கூடியவர். மாதம் தோறும் அமாவாசை நாளில் மிகச் சிறப்பான பூஜைகள் நடைபெறுமாம்.
அன்று அம்மனுக்கு மஞ்சள் புடவை சாற்றி வழிபட்டால், திருமணத் தடைகள் விலகிடுமாம். நாக பீடத்தோடு அம்மன் இருப்பதால் ராகு- கேது தோஷங்களும் நீங்குமாம்.
பில்லி, சூனியம் நீக்கும் கோமதி அம்மன் :
சங்கரன் கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்றவர் கோமதி அம்மன், ஆடித்தபசு இங்கே மிகவும் பிரசித்தம். சிவனும் விஷ்ணுவும் இணைந்து சங்கர நாராயணராக காட்சி தருகிறார். இங்கே உள்ள பல சிறப்புகளில் ஒன்று வசனக் குழி பள்ளமும் ஒன்று.
இந்த வசன குழி பள்ளத்தில் பில்லி சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து, இந்த இடத்தில் பூஜை செய்தால், அவர்களை பிடித்த பில்லி சூனியம் அனைத்து விலகி விடுமாம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..