தலைக்கு வந்தது தலப்பாவோடு போச்சு.. முடிவுக்கு வந்த தங்கலான் பிரச்சனை…!
திரைப்படங்கள் தயாரிப்பு பணிக்காக, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அர்ஜூன்லால் என்பவரிடம் இருந்து கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், கடன் வாங்கி நீண்ட நாட்கள் ஆகியும் அவர் அந்த பணத்தை திரும்பி தரவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இதனால், அர்ஜூன்லால் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், தங்கலான் படத்தின் ரிலீஸ்-க்கு முன்பு, 1 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது.
மேலும், வழக்கை ஆகஸ்டு 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பு வாதங்களையும் நீதிமன்றம் கேட்டது.
இறுதியில், “1 கோடி ரூபாயை டெபாசிட் செய்ததால், படத்தை வெளியிட அனுமதிக்கிறோம்” என்று நீதிமன்றம் தரப்பில் கூறப்பட்டது. மேலும், இந்த வழக்கை, ஆகஸ்டு 28-ஆம் தேதிக்கு மீண்டும் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
-பவானி கார்த்திக்