பால் எதனால் பொங்குகிறது.. தெரியுமா..?
பாலும் தண்ணீரை போல் திரவ வடிவில் உள்ளது. ஆனால் நீரை கொதிக்க வைத்தால் நீரானது பொங்குவது இல்லை. ஆனால் இந்த பாலானது பொங்குவதன் காரணம். பாலில் புரதம், கொழுப்பு, கனிமங்கள் ,கார்போஹய்ட்ரேட்ஸ் போன்ற சத்துகள் உள்ளது.
இவை அனைத்தும் பால் நன்கு சூடான பின்பு பால் ஆடையாக உருவாகிறது. அதனால் பால் நன்கு கொதித்து அதில் உள்ள நீர் ஆவியாக செல்கிறது. ஆனால் பாலின் மேல் படிந்திருக்கும் பால் ஆடை நீராவியை வெளியில் செல்ல விடாமல் தடுக்கிறது.
அந்த சமயத்தில் நாம் அடுப்பு தீயின் அளவை அதிகமாக வைத்தால் பால் கொதிப்பு அதிகமாகி பால் பொங்கி விடும் . அதுவே அடுப்பு தீயின் அளவை குறைக்கும் போது அந்த பாலின் கொதிக்கும் திறன் குறைந்து பால் பொங்காமல் இருக்கும் மற்றும் கரண்டியால் பாலை கலக்கி விடுவதால் அந்த பால் ஆடையானது பிரிந்துவிடும்.
பின்பு பாலும் பொங்காமல் இருக்கும். இதுவே பால் பொங்குவதற்கான காரணமும் அதனை தடுக்கும் வழிமுறைகளும் ஆகும்.
இது மாதிரி பல அறிவியல் சம்மந்தமான தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்
-ரோகிணி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..