வியாழக்கிழமை அன்று என்ன நற்காரியங்கள் செய்யலாம்..? எதை செய்யக்கூடாது..?
கடந்த சில தினங்களாக ஆன்மீக தகவல்கள் பற்றி பார்த்து வருகிறோம் அதில் இன்று நாம் பார்க்க இருப்பது வியாழன் கிழமை அன்று என்ன நற்காரியங்கள் செய்யலாம்..? எதை செய்யக்கூடாது..? தெரிந்தும் தெரியாமலும் நம்மில் பலர் இதை செய்து இருப்போம். ஒரு சிலர் இந்த தவறை தெரியாமல் செய்து இருப்போம்.. அதில் சிலவற்றை பார்க்கலாம்.
வியாழன் கிழமை அன்று காலை இறைவன் வணக்கம் செய்ய வேண்டும். முக்கியமாக சாய்பாபா தரிசனம். சாய்பாபா வழிபாடு பற்றியும், சாய்பாபா விரதம் பற்றியும் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறோம்.. அதை படிக்க மறக்காதீர்கள்.
* வியாழக்கிழமை அன்று கடவுள் படங்கள், சிலைகள் வாங்கலாம்.
* வீட்டில் அனைத்து சுப காரியங்களும் செய்யலாம்.
* குழந்தைக்கு பெயர் சூட்டுதல்,
* தியானம் பழக்கம் தொடங்குதல்
* நிலம் வாங்கலாம்,
* அன்னதானம் வழங்குதல்,
* போர்வெல் கிணறு போடுதல்,
* வளைகாப்பு நடத்துதல்,
* காது குத்துதல்,
* மகன்களை தரிசனம் செய்வது போன்ற செயல்களை செய்யலாம்..
வியான்கிழமை களில் செய்யக்கூடாதவை என்று எதுவும் கிடையாது.., வியாழன் கிழமை களில் மட்டுமல்ல அனைத்து நாளில் நாம் மற்றவருக்கு செய்யக் கூடாதது, “நம்பிக்கை துரோகம்”. சிறந்த இறைவன் அருள் கிடைக்க அனைவருக்கும் உதவி செய்யுங்கள்..
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..