வைகோவிற்கு என்ன ஆச்சு..? துரைவைகோ சொன்ன தகவல்..!
நாகர்கோவிலில் மதிமுக மாவட்ட செயலாளர் வெற்றிவேல் இல்ல திருமணவிழாவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற இருந்தது. ஆனால், வைகோவிற்கு பதிலாக அவரது மகன் துரை வைகோ பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து துரை வைகோவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது., கலிங்கப்பட்டியில் உள்ள வீட்டில் இருந்து திருமண விழாவில் பங்கேற்க வைகோ புறப்பட்டு கொண்டு இருந்த போது திடீரென கீழே தவறி விழுந்து தோள்பட்டையில் சிராய்ப்பு ஏற்பட்டு பெரும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சிகிச்சைக்காக அவர்.., சென்னை கொண்டு செல்லப்பட்டுள்ளார்.., அப்பாவிற்கு காயம் ஏற்பட்டதும் அவரை மருத்துவமனைக்கு கூட அழைத்து செல்ல முடியவில்லை. நான் உதவிக்கு வருகிறேன் என்று சொன்ன போது கூட.,
அவர் என்னை முதலில் மக்களும் தொண்டர்களும் தான் முக்கியம். நாம் வருவோம் என்று அங்கு அனைவரும் காத்துகொண்டு இருப்பார்கள்.., அவர்களை ஏமாற்றம் அடைய செய்ய வேண்டாம்.
என சொல்லி என்னை அனுப்பி வைத்தார். என துரை வைகோ கூறியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு திடீரென ஏற்பட்ட இந்த உடல் பாதிப்பு மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..