என்னது ”விடாமுயற்சி பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த படத்துல இருந்து உருவப்பட்டதா”..? விமர்ச்சிக்கும் ரசிகர்கள்..!
அஜித்:
அல்டிமேட் ஸ்டாரான அஜித் அமராவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் அவர் நடிப்பில் வெளிவந்த வாலி,காதல் கோட்டை,காதல் மன்னன்,அமர்களம் ஆகியவை குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் ஆகும்.
விடாமுயற்சி:
துணிவு படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மகிழ்த்திருமேனி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ‘விடாமுயற்சி’ வெளியாக உள்ள இப்படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே அசர்பைஜானில் துவங்கிய நிலையில் சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு 6 மாதம் நடைபெறாமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி மீண்டும் துவங்கிய படப்பிடிப்பு அஜித்துடன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் மற்றும் அர்ஜுன் உள்ளிட்டவர்களும் இணைந்துள்ள நிலையில் 2 அல்லது 3ம் தேதி படத்தின் சூட்டிங்கில் நடிகை திரிஷாவும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து படத்தின் சூட்டிங் இரண்டு வாரங்கள் அசர்பைஜானில் நடக்கவுள்ள நிலையில் இதையடுத்து சென்னை அல்லது மும்பையில் சில பேட்ச் வேலைகளையும் மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் அப்டேட் எதுவும் நீண்ட நாட்களாக வராமல் இருந்த நிலையில், நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தையே கலக்கி வந்தது.
போஸ்டர் விமர்சனம்:
இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள், தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஆனால், தற்போது, ”இந்த போஸ்டர் ஏற்கனவே வெளியான அஜித் படத்தில் இருந்தே உருவப்பட்டது என்று சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.
அதாவது, அஜித்தின் விவேகம், வலிமை ஆகிய படங்களிலும், இதே மாதிரியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் வெளியிடப்பட்டிருந்தது”. இதனை வைத்து தான், இந்த போஸ்டரை சிலர் விமர்சித்து வருகின்றனர்.
-பவானி கார்த்திக்