வைகாசி விசாகம் என்றால் என்ன..? கடைபிடிக்க வேண்டிய விரதம்..! கிடைக்கும் வரம்..!!
வைகாசி விசாகம் என்பது வைகாசி மாதத்தில் வரும் நாளலல்ல, முருகருக்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு நாள், இன்றைய நாளில் நாம் வைகாசி விசாக விரதம் இருந்தால் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பிறக்கும் ஒரு நாள். வைகாசி மாதத்தில் வரக்கூடிய விசாக நட்சத்திரத்தில் முருகர் அவதரித்தால் இன்றைய நாளை “வைகாசி விசாகம்” என்று அழைக்கப்படுகிறது.
நம்முடைய முருகப்பெருமான் வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் இன்றைய நாள் வைகாசி விசாகம் என அழைக்கப்பட்டது மேலு முருகருக்கு “விசாகன்” என்ற மற்றொரு பெயரும் உண்டு.
விசாகம் என்றால் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நாள் என்பதால் இன்றைய நாளில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம்.
அன்றைய காலத்தில் பராசரர் முனிவர் என ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். ஒருமுறை அந்த 6 குழந்தையும் ஆற்றில் விளையாடி கொண்டிருக்க பராசரர் முனிவர் குழந்தைகள் மேலே வரும் படி அழைத்துள்ளார்.
ஆனால் குழந்தைகள் முனிவரின் பேச்சை கேட்காமல், தொடர்ந்து விளையாடி கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்த முனிவர், இனி நீங்கள் மீன்கள் மாறிவிடுக என சாபம் கொடுத்தார்.. சம்பித்து போன குழந்தைகள் இதற்கு விமோச்சனம் கிடையாதா என கேட்க.
அதற்கு முனிவர், அன்னை பார்வதி தேவி முருகப்பெருமானுக்கு எப்போ பால் அன்னம் கொடுக்கும் போது.., அது தவறி விழும் போது அதன் ஒரு சொட்டு உங்களது வாயில் பட்டால் மட்டுமே விமோச்சனம் கிடைக்கும் என முனிவர் சொல்லுகிறார்.
இதனை அறிந்த சுட்டி முருகர், பார்வதி தேவி அன்னத்தில் முருகருக்கு பால் கொடுத்து கொண்டிருக்கும் போது அதனை வேண்டும் என்றே தட்டி விடுகிறார்.. அந்த பால் சொட்டுகள் மீன்கள் வாயில் பட்டதும்.., மீண்டும் அவர்கள் குழந்தைகளாக மாறிவிடுகிறார்கள்.
இந்த செயல் வைகாசி விசாகம் அன்று நிகழ்ந்த தாள் வைகாசி விசாகம் கொண்டாடப்பட்டு வருகிறது.., இன்றைய நாளில் நாமும் விரதம் இருந்து வழிபட்டால் நமக்கு நல்ல காலம் பிறக்கும்.
வைகாசி விசாகம் நாளில் விரதம் இருக்கும் பக்தர்கள் நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். ஒரு சிலரால் இருக்க முடிய வில்லை என்றால் ஒருவேளை மட்டும் உணவு சாப்பிட வேண்டும்.
பால், பழம் சாப்பிட்டு கூட விரதத்தை தொடங்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான “ஓம் சரவணபவ” மற்றும் “ஓம் முருகா” எனும் ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரிக்கலாம்.
மாலை நேரத்தில் தீபம் ஏற்றி கந்த சஷ்டி கவசம் படிக்கலாம்.
வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள் இன்றைய நாள் முழுதும் விரதம் இருந்து, வழிபாடு செய்து பூஜைகள் மேற்கொள்ளலாம்.
இன்றைய நாளில் முருகருக்கு பிடித்த கந்தர்ப்பம் எனும் இனிப்பு அப்பத்தை படைத்து மாலை 6 மணிக்கு மேல் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.
கந்தர்ப்ப அப்பம் படைக்க முடியாதவர்கள், முருகருக்கு பிடித்த தேன், தினை மாவு அல்லது தேன் கலந்த பால் படைத்து தீப ஆராதனை செய்து வழிபாடு செய்யலாம்.
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் பகை விலகும். மற்றும் துன்பம் நீங்கும்.
இந்நாளில் மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை பிறருக்கு தானமாக கொடுத்தால் திருமண ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் ஆகும்.
குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்.
மேலும் குழந்தை வரம் வேண்டுபவர்கள் சஷ்டி விரதம் இருந்தும் வழிபடலாம். குறிப்பாக முருகன் அவதரித்த வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபட்டால், அடுத்த ஆண்டு வைகாசி விசாகத்திற்குள் குழந்தை பிறக்கும் என்பது ஐதீக உண்மை.
குறிப்பாக வைகாசி விசாகம் அன்று நானும் விரதம் இருக்கிறேன் என்று பெயருக்கு இருக்க கூடாது.., மனதார தன் வாழ்வில் இருக்கும் துன்பங்கள் நீங்கி புது வாழ்க்கை பிறக்க வேண்டும் என விரதம் இருக்க வேண்டும்.
முருகா என்று அழைக்கும் போது.., மனம் உருகி அழைக்க வேண்டும்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..