இது என்ன தக்காளிக்கு வந்த சோதனை..!!
பழனியில் விலை வீழ்ச்சியால் தக்காளிகள் கீழே கொட்டப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழநி பகுதியில் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவர்கள். இப்பகுதியில் நீர் இருப்பைக் கொண்டு தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர்கள் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளன.
தற்போது தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த மாதம் கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது கிலோ 7ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் வேதனை அடைந்த விவசாயிகள் தக்காளியை கால்நடை உயிரினங்களுக்கு கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்த காய்கறி வியாபார சங்க உரிமையாளர் கூறுவது “தக்காளியின் வரத்து அதிகரித்து இருப்பதால் மார்க்கெட்டில் 14 கிலோ எடை கொண்ட முதல்தர தக்காளி பெட்டி 130 ரூபாய்க்கு” விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..