சமூகநீதி என பேசும் பொழுது நாம் நினைக்க வேண்டிய தலைவர் அண்ணல் அம்பேத்கர் ஆவார். பட்டியல் இனத்தில் பிறந்தவர். கடும் எதிர்ப்புகளையும் புறக்கனிப்புகளையும் சந்தித்து வெளிநாட்டில் உயர்கல்வி பயின்றவர். பட்டியல் இனத்தில் பிறந்ததால் அவரை பட்டியலின தலைவராக எல்லோரும் பார்க்கிறார்கள். அவர் அரசியல் நிர்ணய சபையில் போராடியது பிற்படுத்தபப்ட்ட மக்களுக்காகவும் பெண்களுக்காகவும் என்பதை பலரும் அறியார்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும், பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும், பெண்களுக்கு மறுமண உரிமை வேண்டும் என சட்டதிருத்தம் கொண்டு வர சட்டம் இயற்றினார். அண்ணல் அம்பேத்கரை பெரிதும் மதிக்கும் நம் இயக்க தந்தை வைகோ அவர்கள் அண்ணல் அம்பேத்கருக்காக செய்த மரியாதை பலரும் அறியாதது.
1978 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் நாள் பதவியேற்ற தலைவர் வைகோ, நாடாளுமன்ற மைய மண்டபங்களில் சுற்றி பார்த்த பொழுது அண்ணல் அம்பேத்கரின் படம் இடம்பெறாததை கண்டு வேதனை பட்டார். வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம் அவையில் அண்ணல் அம்பேத்கரின் படம் வைக்க வேண்டும் என்று வலியுறுதினார்.
1985 ஆம் ஆண்டு டிசம்பர் 5 அன்று இந்த அரசு சமூகநீதியை மதிக்கிறது என்றால் அண்ணல் அம்பேத்கர் படமும் தந்தை பெரியார் படமும் நாடாளுமன்ற மையமண்டபத்தில் திறக்கப்படவேண்டும் என வெகுண்டெழுந்தார். அரசிடம் பதில் இல்லை.
தன் மீது பாசம் கொண்ட வி.பி.சிங் பிரதமராக இருந்த பொழுது அந்த கோபம் குறையாமல், அண்ணல் அம்பேத்கர் படத்தை திறந்தால் இந்த கட்டிடம் தீட்டுப்பட்டுவிடுமா என கோபக்கனல் வீசினார். பொறுமையாக கேட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலர் வி.பி சிங் நாடாளுமன்ற மையமண்டபத்தில் அண்ணல் அம்பேத்கர் படம் இடம் பெற உத்தரவிட்டார். 43 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் அரசியல் சட்டமியற்றிய அண்ணல் அம்பேத்கரின் படத்தை திறக்க தெற்கு சீமையிலிருந்து தலைவர் வைகோ வர வேண்டியிருந்தது.
சமூகநீதி, பெண்ணுரிமை, பிற்படுத்தப்பட்டவர் நலன், தத்துவம், சட்டம் என பல தளங்களிலில் சாதனை புரிந்த மாபெரும் தலைவர் அண்ணல் அம்பேத்கரின் படத்தை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறந்து வைக்க காரணம் இயக்க தந்தை வைகோ என்ற பெருமிதத்துடன் சமூகநீதி காப்போம், சமத்துவம் பேனுவோம் என அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில் உறுதியேற்போம்.
அத்துடன் இதுதொடர்பாக வைகோ பேசிய பழைய காணொலி ஒன்றையும் தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார். இதோ அந்த வீடியோ….
அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் இன்று.
நாடாளுமன்றதில் அண்ணல் அம்பேத்கர் படம் திறக்க நம் இயக்க தந்தை தலைவர் வைகோ அவர்கள் எடுத்த முயற்சிகள் குறித்து சில ஆண்டுகளுக்கு முன் கூட்டம் ஒன்றில் அவர் பேசிய கானொளி pic.twitter.com/PXY3Cutovs
— Durai Vaiko (@duraivaikooffl) April 14, 2023
அண்ணல் அம்பேத்க