30 Total Views , 1 Views Today
கிட்டதட்ட ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருமே குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப்பை பயன்படுகிறோம். அதாவது உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான மக்கள் இன்று வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்நிறுவனம் தனது பயனர்களை தக்கவைத்துக்கொள்ளவும், அவர்களது தேவைகளை பூர்த்தி செய்யயும் அவ்வப்போது அப்டேட்களை அள்ளிவீசி வருகிறது.
சமீபத்தில் பர்சனல் மெசெஜ்களை பாதுகாக்கும் வகையில் ‘சாட் லாக்’-கையும் மற்றும் 15 நிமிடத்திற்குள் தவறான மெசெஜ்ஜை திருத்திக்கொள்ள ‘எடிட்’ போன்ற அம்சங்களை வெளியிட்டிருந்தது.
தற்போது வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது அக்கவுண்ட்டிற்கு தனிப்பட்ட பெயரை பதிவு செய்யும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் அப்டேட்ஸ் டிராக்கரான WABetaInfo வெளியிட்டுள்ள தகவலின் படி, தற்போது வாட்ஸ்அப் பயனர்கள் தங்களது பெயர் மற்றும் செல்போன்னை பாதுகாக்கும் விதமாக புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அதாவது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்று வாட்ஸ் அப் செயலியிலும் Username முறை கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பயனர்கள் தங்கள் கணக்குகளுக்கு தனித்துவமான பயனர் பெயர்களை (Username) அமைப்பதற்கான புதிய அம்சம் விரைவில் வெளிவருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, வாட்ஸ் அப் யூசர்-நேம் (Whatsapp Username) கொண்டு ஒரு தனிநபர் வாட்ஸ் அப் கணக்கை அடையாளம் காண அனுமதிக்கும் அம்சத்தில் வாட்ஸ் அப் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.