உலகில் பலராலும் பயன்படுத்த கூடிய செயலியான வாட்ஸ் அப் செயலி தற்போது பழைய ஸ்மார்ட் போன்களில் செயல்படாது என்று அறிவித்துள்ளது. இந்த நடைமுறை இந்த ஆண்டின் கடைசி நாள் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.
உலகில் பிரபாலமான மற்றும் பலராலும் பயனபடுத்தபடும் செயலியான வாட்ஸ் அப் நிறுவனம் அதன் பயனாளர்களுக்கு அவ்வப்போது புது புது அப்டேட்டகளை கொடுத்து வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான அப்டேட்டாக பயனாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதில், பழைய போன்களில் டுத்த ஆண்டு முதல் வாட்ஸ் ஆப் செயல்படாது என்று தெரிவித்துள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ள போன்களில் ஆப்பிள்,சாம்சங், ஹூவாய் மற்றும் லெனோவா போன்ற முன்னணி நிறுவங்களின் பழைய போன்களும் இடம் பெற்றுள்ளது. ஆப்பிள் ஐபோன் 5, ஐபோன் 5சி, சாம்சங் காலக்சி சில போன்கள் மற்றும் சோனி, எல்ஜி மற்றும் லெனோவா உள்ளிட்ட சில போன்களில் வாட்ஸ் அப் செயல்படாது என்ற தகவல் பரவி வருகிறது.