பிறந்த குழந்தை குளிக்க வைக்கும் பொழுது ; இதை கவனிக்க மறுக்காதீர்கள்..!!
குழந்தை பராமரிப்பு என்பது பெற்றோர்களுக்கு சவாலான ஒன்றாக இருக்கிறது. அதிலும் பச்சிளம் குழந்தை வளர்ப்பு, குழந்தை பராமரிப்பில் முக்கியமான ஒன்றை இப்பொழுது பார்க்கலாம்.
குழந்தையை குளிக்க வைக்கும் பொழுது.., இதை செய்ய மறக்காதீர்கள்.
* குழந்தை குளிப்பதற்கு முன்னும், பின்னும் தாய்ப்பால் கொடுக்க கூடாது.., குளித்ததற்கு முன்னும் பின்னும் அரை மணி நேரம் இடைவேளியாவது இருக்க வேண்டும்.
* குழந்தைகளை பாத் டப்பில் வைத்துக் குளிப்பாட்டினாள்.., அவர்களின் பராமரிப்பிற்கு ஏற்றவாறு இருக்கும்.
* குழந்தையை குளிப்பாட்டும் பொழுது அவர்களை பிடித்து உலுக்கவோ அல்லது காதிலும் மூக்கிலும் ஊதவோ கூடாது.
* வாரத்தில் இருமுறை கட்டாயம் தலைக்கு குளிப்பாட்ட வேண்டும்.
* தண்ணீர் அதிக சூடாக இருக்க கூடாது, அது குழந்தையின் சருமத்தை பாதித்து விடும். தண்ணீர் சற்று வெதுவெதுவென இருந்தால் போதும்.
* குளித்து முடித்தவுடனே மென்மையான டவல் கொண்டு, குழந்தையின் உடலை துடைக்க வேண்டும்.
* தலைக்கு குளிப்பாட்டிய பின், குழந்தைக்கு சாம்பிராணி போட்டு விடலாம். அதுவும் குழந்தையின் மூக்கிற்கு சாம்பிராணி நெடி போகாதவாறு வைத்து போட வேண்டும்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி