பட்டபகலில் இருசக்கர வாகனம் திருட்டு-ஈரோடு!!!
கோபிசெட்டிபாளையம் நகர்பகுதியில் பட்டபகலில் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வாய்க்கால்ரோடு பகுதி சேர்த்த சண்முகம் என்பவர் பிள்ளையார் கோவில் பகுதியில் நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.
இவர் கடை முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்று பணியில் ஈடுபட்டிருதார். சிறிது நேரத்திற்கு பின் வெளியே வந்து பார்த்த போது தனது இருசக்கர வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி செல்வது தெரியவந்தது.
தொடர்ந்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களியையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.