சமையல் கத்துக்கணுமா..? இது போதும்..! வாங்க பார்க்கலாம்..!
இட்லிக்கு மாவு அரைக்கும்போது உளுந்தை கொஞ்சமாக சேர்த்து அரைத்து இட்லி ஊற்றும்போது சிறிது நல்லெண்ணெய் விட்டு ஊற்றினால் இட்லி மிருதுவாக வரும்.
பச்சைமிளகாயை ஃபிரிஜ்ஜில் வைப்பதற்கு முன் அதன் காம்புகளை நீக்கினால் நீண்ட நாட்களுக்கு வீணாகாமல் இருக்கும்.
கீரை மற்றும் வெண்டைக்காயை நன்றாக வதக்கிய பின்னரே அதற்கான உப்பை சேர்க்க வேண்டும், அப்போதுதான் அதன் சரியான அளவு தெரியும்.
இட்லி வேகவைக்கும்போது அந்த தண்ணீரில் எலுமிச்சை தோல் மற்றும் கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்தால் இட்லி வாசனையாக வரும்.
புளிக்குழம்பு செய்யும்போது தனியா, காய்ந்த மிளகய ஆகியவற்றை கொரகொரப்பாக அரைத்து சேர்த்தால் சுவை அருமையக இருக்கும்.
கூட்டு மற்றும் பொரியல் ஆகியவற்றில் உப்பு அதிகமாகிவிட்டால் அதில் சிறிது தேங்காய் துருவலை சேர்த்தால் சரியாகிவிடும்.
பகோடா செய்யும்போது மாவில் நெய், உப்பு கலந்த தயிர் சேர்த்து பிசைந்து சுட்டால் சூப்பராக பகோடா வரும்.
ரவா தோசை செய்யும்போது சிறிது கடலை மாவு சேர்த்து கலந்து ஊற்றினால் நன்றாக மொறுமொறுவென வரும்.
வாழைப்பூ மற்றும் வாழைத்தண்டை நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டுவைக்க அது கருப்பாக மாறாமல் இருக்கும்.
வாழைப்பூ மற்றும் வாழைக்காயை நறுக்கும்போது கைகளில் சிறிது உப்பு தடவிகொண்டால் கைகளில் ஒட்டாது.
மீந்துபோகும் தேங்காய் துருவலில் சிறிது உப்பு கலந்து வைக்க அது விரைவில் கெடாமல் இருக்கும்.