நீங்களும் சமையல் ஈசியா கத்துக்கலாம் வாங்க..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- எந்தவொரு பொருட்களின் மேல் இருக்கும் கறையையும் நீக்குவதற்கு தக்காளி பயன்படும்.
- குருமா குழம்பிற்கு தேங்காய் இல்லை என கவலை வேண்டாம் கசகசாவை ஊறவைத்து அரைத்து குழம்பு செய்தால் சூப்பராக இருக்கும்.
- இட்லி மாவில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கலந்து இட்லி செய்தால் மென்மையாக இருக்கும்.
- அவசரமாக பருப்பு மற்றும் அரிசி அரைக்க வேண்டுமெனில் சூடான நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்தால் சட்டென ஊறிவிடும்.
- சமைக்கும்போது இஞ்சி இல்லையெனில் சுக்கு தட்டி போட்டு சூடான நீரில் ஊறவைத்து பின் இஞ்சி போல பயன்படுத்தலாம்.
- துணிக்கு பயன்படுத்தும் சோப்பினை வெள்ளை துணியில் அதிகமாக பயன்படுத்தினால் துணி மஞ்சளாக மாறிவிடும் எனவே சோப்பை குறைவாக பயன்படுத்தவும்.
- உருளைக்கிழங்கு கறி செய்யும்போது இஞ்சி அரைத்து சேர்த்து செய்தால் கிழங்கில் இருக்கும் வாய்வு பிரச்சனை இருக்காது.
- இட்லி வேகும்போது பாத்திரத்தில் மேல் பூண்டை சிறிது நேரம் வைத்திருந்து பின் உரித்தால் ஈசியாக உரிக்கலாம்.
- சோமாஸ் செய்யும்போது அதில் வைக்கும் பூரணம் உதிராமல் இருக்க அதில் சிறிது நெய் சேர்த்து செய்தால் உதிராது.
- பருப்பு வேகவைக்கும்போது சிறிது ஆயில் மற்றும் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
- லட்டு பிடிக்கும்போது பழ எசென்ஸ் விட்டு பிசைந்து செய்தால் நல்ல வாசனையாக இருக்கும்.
- தீபாவளி பலகாரம் ஜீரணமாக சுக்கு மற்றும் கருப்பட்டி ஆகியவற்றை பொடித்து சாப்பிடலாம்.