ADVERTISEMENT
சமையல் ராணி ஆவது எப்படி..?
-
பூண்டு தோல் உரிப்பதற்கு நிறைய நேரம் தேவைப்படும். ஒவ்வொரு பல்லாக பூண்டை பிரித்துக் கொள்ள வேண்டும்.
-
பின் பூண்டை ஒரு வாணலில் போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி வாணலை சூடு செய்ய வேண்டும். பிறகு மென்மையான சூட்டில் கை பொறுக்கும் சமையத்தில் பூண்டை தேய்த்தபடி அழுத்தினால் பூண்டு தோல் வந்துவிடும்.
-
பாயசம் காய்ச்சும்போது பால் திரிந்து போனால், ஒரு சிட்டிகை சமையல் சோடா மாவை பாலில் போட்டால் திரிந்து போன பால் சரியாகிவிடும்.
-
2 டீஸ்பூன் கடலை மாவை, ரவா தோசை செய்யும்போது சேர்த்து கலக்கி தோசை சுட்டால், தோசை மொறுமொறுவென சுவையாக இருக்கும்.
-
வீட்டில் டீ போடும்போது டீ சுவையாக இருக்க சிறிது instant coffee தூளை கலந்துக் கொள்ளவும்.
-
உப்பு ஜாடியில் எலுமிச்சை பழத்தை போட்டு வைத்தால் நீண்ட நாள் வாடாமல் இருக்கும்.
-
பிஸ்கட் நமத்து போகாமல் மொறுமொறுவென இருப்பதற்கு ஒரு பாட்டிலில் 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 2 லவங்கம் போட்டு அதில் பிஸ்கட்ட வைத்தால் நமத்து போகாமல் இருக்கும்.
-
சாம்பார் சுவையாக இருக்க ஒரு டீஸ்பூன் நெய்யை சாம்பார் இறக்கும் சமையத்தில் விட்டு இறக்கவும்.
-
தேங்காயை அதன் ஓட்டில் இருந்து ஈசியாக எடுப்பதற்கு தேங்காயை சிறிது சூடு செய்து ஆறவிட்டு ஒரு ஸ்பூன் வைத்து நெம்பினால் ஈசியாக வந்துவிடும்.
-
வெங்காய பகோடா போடும்போது அதில் வறுத்த வேர்கடலை பொடி சேர்த்து பிசைந்து பகோடா போட்டால் மொறுமொறுவென இருக்கும்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.