சுவையான ஓட்ஸ் பணியாரம் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் 1/2 கப்
உளுத்தம்பருப்பு 1/2 கப்
வெங்காயம் 1
குடைமிளகாய் 1
கேரட் 1
மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
மிளகுத்தூள் 1/4 ஸ்பூன்
உப்பு தேவையானது
செய்முறை:
முதலில் உளுத்தம் பருப்பை நன்றாக நீரில் இரண்டு மூன்று முறை சுத்தமாக கழுவி தண்ணீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும்.
உளுந்து ஊறியதும் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மிக்ஸியில் ஓட்ஸ் சேர்த்து அரைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.
பின் இதனை மாவில் கலந்து மேலும் உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
இதில் நறுக்கிய வெங்காயம், கேரட் மற்றும் குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
அடுப்பில் பணியாரக் கல்லை வைத்து எண்ணெய் தடவி சூடானதும் அதில் மாவில் அரை கரண்டியை எடுத்து ஊற்றி வேகவைக்கவும்.
ஒருபக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பிப்போட்டு பொன்னிறமாக வேகவைக்கவும்.
அவ்வளவுதான் சுவையான ஓட்ஸ் பணியாரம் தயார்.
இதற்கு தேங்காய் சட்னி சாப்பிட சுவையாக இருக்கும், தேங்காய் சட்னி செய்வதற்கு ஒரு மிக்ஸி ஜாரில் இரண்டு தேங்காய் பத்தை நறுக்கி சேர்த்து கொள்ளவும்.
பிறகு, இரண்டு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சிறிது, இஞ்சி ஒரு துண்டு, பூண்டு நான்கு பற்கள், பொட்டுக்கடலை ஒரு கைப்பிடி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
தாளிப்பதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதனை சட்னியில் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் ஓட்ஸ் பணியாரம் மற்றும் தேங்காய் சட்னி தயார்.