சண்டே ஸ்பெஷல் புதினா சிக்கன் கறி…!
சிக்கன் – 1 கிலோ
உப்பு – 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 1 பழ சாறு
இஞ்சி பூண்டு விழுது – 4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 3 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 1/2 தேக்கரண்டி
தயிர் – 3/4 கப்
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
நெய் – 1 மேசைக்கரண்டி
பட்டை,கிராம்பு,ஏலக்காய்,சீரகம்
வெங்காயம் – 3 நறுக்கியது
தண்ணீர் – 3/4 கப்
பச்சை மிளகாய் – 5 நறுக்கியது
புதினா – 1 கப்
கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி
மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
சிக்கனை சுத்தம் செய்து மேலே ஊறவைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை எல்லாம் போட்டு கலந்து 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி பட்டை,கிராம்பு,ஏலக்காய்,சீரகம் ஆகியவற்றை போட்டு பொரிக்கவும்.
பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின் ஊறவைத்த சிக்கனை போட்டு நல்லா வதக்கவும்.
பின் தண்ணீர் ஊற்றி சிக்கனை வேக வைக்கவும்.
ஒரு மிக்ஸியில் புதினா,கொத்தமல்லி பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
அந்த விழுதையும் சிக்கனுடன் சேர்த்து வேக விடவும்.
பின் சிக்கன் வெந்ததும் இறக்கும் சமையத்தில் மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.