கறி குழம்பை மிஞ்சும் சுவையில் சைவ குழம்பு..!
தேவையான பொருட்கள்:
உருண்டை செய்ய:
மீல்மேக்கர் 60 கிராம்
எண்ணெய் பொரிக்க
உப்பு தேவையானது
மல்லித்தூள் 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
சிக்கன் மசாலா 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது அரை ஸ்பூன்
கடலை மாவு அரை கப்
குழம்பு செய்ய:
எண்ணெய் தேவையானது
பட்டை, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர மொக்கு, பிரிஞ்சி இலை
வெங்காயம் 1
கறிவேப்பிலை சிறிது
இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
தக்காளி 2
மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
மிளகாய்த்தூள் அரை ஸ்பூன்
மல்லித்தூள் 1 ஸ்பூன்
சிக்கன் மசாலா அரை ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் அரை ஸ்பூன்
உப்பு தேவையானது
தேங்காய் துருவல் அரை கப்
முந்திரி 6
சீரகம், சோம்பு, கசகசா
கொத்தமல்லி இலை சிறிது
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி சூடானதும் அதில் மீல்மேக்கர் சேர்த்து வெந்ததும் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பின் அதனை மற்ற நீரில் இரண்டு முறை கழுவி நீரை பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு மிக்சி ஜாரில் இதனை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் அரை கப் அளவிற்கு கடலை மாவு, மல்லித்தூள், மிளகாய்த்தூள், சிக்கன் மசாலா, உப்பு, அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, அரைத்த மீல்மேக்கர் சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் சிறிது சிறிதாக மீல்மேக்கர் கலவையை சேர்த்து பொன்னிறமாக வேகவைத்து தனியே வைக்கவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, நட்சத்திர மொக்கு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து பொரிந்ததும் அதில் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போனதும் அரைத்த இரண்டு தக்காளி விழுது, மஞ்சள்தூள் கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் அரைஸ்பூன், மல்லித்தூள் 1 ஸ்பூன், சிக்கன் மசாலா 1/2 ஸ்பூன், காஷ்மீரி மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின் தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் அரை கப், முந்திரி, சோம்பு, சீரகம், கசகசா சேர்த்து லேசாக நீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
குழம்பு நன்றாக கொதித்ததும் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
பின் பொரித்த உருண்டைகளை சேர்த்து குக்கரை மூடி 1 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
பின் குக்கரை திறந்து நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி கிளறி விட வேண்டும்.
அவ்வளவுதான் மீல்மேக்கர் வைத்து கறி குழம்பை மிஞ்சும் சுவையில் சைவ குழம்பு ரெடி.