டேஸ்டியான சிக்கன் சமோசா..! ஈவினிங் ஸ்நாக்..!
சிக்கன் – 300 கிராம்,
பச்சை மிளகாய் – 4,
வெங்காயம் – 250 கிராம்,
இஞ்சி, பூண்டு விழுது – அரை ஸ்பூன்
கிராம்பு – 6
மைதா – 350 கிராம்
பேக்கிங் பவுடர் – 2 ஸ்பூன்
நெய் – 3 ஸ்பூன்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
கொத்துமல்லி – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
- ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதில் பேக்கிங் பவுடர்,உப்பு, நெய், தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக பிசைந்து இரண்டு மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
- சிக்கனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின் எடுத்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கிக் கொள்ளவும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து சூடானதும் கிராம்பு போட்டு தாளித்து பின் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- பின் நறுக்கி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்றாக கலந்து வதக்க வேண்டும். பின் சிக்கன் வெந்ததும் உப்பு, கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- பின் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து பின் அதனை வட்ட வடிவமாக தேய்த்து பின் அதனை முக்கோண வடிவத்தில் மடித்து அதனுள் சிக்கன் கலவையை வைத்து மடித்து ஓரத்தில் மூடி விட வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தயாரித்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- அவ்வளவு தான் இப்போ சுவையான சிக்கன் சமோசா தயார்.
