சுவையான முட்டை சாதம்..!
தேவையான பொருட்கள்:
சாதம் – 1 கப்
முட்டை – 4
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை – 1 கொத்து
சீரகம் – 1/2 tsp
எண்ணெய் – 4 tsp
மஞ்சள் தூள் – 1/4 tsp
செய்முறை:
அரிசியை உதிரி உதிரியாக உப்பு சேர்த்து வடித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம் சேர்த்து தாளித்து பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமானதும் முட்டை உடைத்து ஊற்றி உப்பு சேர்த்து கிளற வேண்டும்.
அதில் வடித்த சாதம் போட்டு மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான முட்டை சாதம் தயார்.