நாவில் எச்சில் ஊறும் பிரான் நெய் ரோஸ்ட்..!
இறாலில் பலவித வைட்டமின்கள் அடங்கியுள்ளது. இறால்கள் முழுமையான புரதங்களை பெற்றிருக்கிறது. இது புற்றுநோயில் இருந்து காக்கும், இளைமையாக இருக்க உதவியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- அரை கிலோ பிரான்
- உப்பு
- மஞ்சள் தூள்
- ஒரு டீஸ்பூன் மல்லி
- ஒரு டீஸ்பூன் மிளகு
- ஒரு டீஸ்பூன் சோம்பு
- ஒரு டீஸ்பூன் சீரகம்
- ஒரு துண்டு இஞ்சி
- மூன்று பல் பூண்டு
- எலுமிச்சை சாறு
- எட்டு வரமிளகாய்
- நெய்
- ஒரு பெரிய வெங்காயம்
- உப்பு
- கால் கப் தயிர்
- கருவேப்பிலை
- வேக வைத்த பிரான்
- அரைத்து வைத்த மசாலா
செய்முறை:
- பிரானை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் பிரான், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் வேக வைத்து ஒரு தட்டிற்கு மாற்றவும்.
- ஒரு வாணலில் மல்லி, சோம்பு, மிளகு, சீரகம், வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்தவற்றை சேர்த்து பூண்டு, இஞ்சி, எலுமிச்சை சாறு மற்றும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் , சிறிதளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
- வெங்காயம் வதங்கியதும் தயிர், அரைத்த மசாலா சேர்த்து கிளறி வதக்க வேண்டும்.
- பச்சை வாசனை போனதும் வேகவைத்த பிரான், கறிவேப்பிலை ஆகியவர்றை சேர்த்து கிளறிவிட்டு அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் பிரான் நெய் ரோஸ்ட் தயார். சாப்பிட சுவையாக இருக்கும் சாப்பிட்டு மகிழுங்கள்.