உடலுக்கு வலுவூட்டும் இனிப்பு சாமை பொங்கல்…! செய்வது எப்படி..?
சிறுதானியங்கள் உடலுக்கு நன்மை அளிக்கக் கூடியது. அதில் ஒன்றான சாமையில் நார்ச்சத்து, கால்சியம் மற்றும் இருப்பு சத்து ஆகியவை இருக்கின்றன. பெரும்பாலும் சாமையை யாரும் உணவில் சேர்த்து கொள்வதில்லை. இப்போ நம்ம ஊட்டச்சத்து நிறைந்த சாமையை வைத்து ஒரு இனிப்பு பொங்கல் செய்யலாமா..
தேவையான பொருட்கள்:
சாமை – 1 கப்
தண்ணீர் – 2 கப்
நெய் – ½ கப்
வெல்லம் – ½ கப்
ஏலக்காய் தூள் – ¼ ஸ்பூன்
முந்திரி, உலர் திராட்சை – தேவைக்கேற்ப
முதலில் ஒரு கப் சாமையை எடுத்து சுத்தம் செய்து நன்றாக இரண்டு மூன்று முறை சுத்தமாக கழுவி பின் ஒரு 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். காரணம் ஊறி இருக்கும் சாமையை வேக வைக்க சுலபமாக இருக்கும்.
பின் ஒரு பாத்திரத்தில் ஊற வைத்திருக்கும் சாமையை தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். அரிசி போலவே சாமையும் இருப்பதால் அதை அழுத்தி பார்த்தே வெந்து விட்டதா என அறிந்துக் கொள்ளலாம்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
ADVERTISEMENT
சாமை வெந்ததும் அதிலிருக்கும் தண்ணீரை வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலை அடுப்பில் வைத்து சிறிது நெய் விட்டு அது சூடாகி உருகியதும் அதில் வேகவைத்த சாமையை சேர்க்க வேண்டும்.
சாமை மற்றும் நெய் ஒன்றாக கலந்து வந்ததும் அதில் வெல்லத்தை போட்டு சாமையோடு நன்றாக கலந்து வரும் வரை கிளறிவிட வேண்டும்.
பின் அதில் ஏலக்காய்த்தூள், முந்திரி மற்றும் திராட்சையை கலந்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.
பள்ளி விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழ்ந்தைகளுக்கு மாலையில் செய்து கொடுக்க ஏற்றது.