ஆரோக்கியமான காய்கறி உப்புமா..!
நம் உடலுக்கு காலையில் எடுத்துக் கொள்ளும் உணவு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அந்த வகையில் நான் சொல்லிருக்கும் முறையில் காய்கறிகள் போட்டு சமைத்து சாப்பிட்டு பாருங்க, உடம்புக்கும் நல்லது.
தேவையான பொருட்கள்:
- 1 கப் ரவா
- 2 டேபிள் ஸ்பூன் காரட் நறுக்கியது
- 2 டேபிள் ஸ்பூன் பீன்ஸ் நறுக்கியது
- 2 டேபிள் ஸ்பூன் பச்சை பட்டாணி
- 1 வெங்காயம்
- 2 பச்சை மிளகாய்
- கறிவேப்பிலை
- 2 டேபிள் ஸ்பூன் நெய்
- 1/4 டீஸ்பூன் கடுகு
- 2 டேபிள் ஸ்பூன் முந்திரி
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
ஒரு வாணலை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கப் ரவையை அதில் சேர்த்து மிதமான தீயில் லேசாக வறுத்து பின் தனியே வைக்கவும்.
பின் வெங்காயம், பீன்ஸ், கேரட், மிளகாய் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி பின் கடுகு சேர்த்து பொரிந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி சேர்த்து வதக்கி அதி தண்ணீர் மற்றும் உப்பு போட்டு கலந்து விடவும்.
காய்கறிகள் வெந்ததும் வறுத்து வைத்துள்ள ரவையை சேர்த்து கிளறி விடவும்.
மூடி போட்டு வேகவைத்து எடுத்து கிளறிவிட்டால் காய்கறிகள் உப்புமா தயார்.
அவ்வளவுதான் காய்கறி உப்புமா ரெடி இதனுடன் தேங்காய் சட்னி அரைத்து வைத்து சேர்த்து சாப்பிடலாம் ரொம்ப ருசியாக இருக்கும்.