சுதந்திரதின விழாவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தா பெண்ணால் பரபரப்பு..!
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த சுதந்திர தின விழா நிகழ்வில் மன்னனை கேனுடன் மனு கொடுக்க வந்த தாய் மற்றும் மகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது. கலெக்டர் மெர்சி ரம்யா தேசியக் கொடியை ஏற்றி போலீசாரின் மரியாதை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை கலெக்டர் ,எஸ் பி மற்றும் அதிகாரிகள் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அன்னவாசல் அருகே புல்வயல் பகுதியைச் சேர்ந்த சரிதா என்ற பெண் கையில் பெட்ரோல் கேனுடன் திடீரென விழா பந்தல் அருகே வந்து கலெக்டரின் காலில் விழுந்து கதறி அழுதார். அவரது மகள் சுவேதா கையில் மனுவுடன் கண்ணீருடன் நின்று கொண்டு இருந்தார்.
அங்கு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து விசாரித்தனர். தனது வீட்டு முன்பு உள்ள பொதுப்பாதையை உலகப்பன் என்பவர் அடைத்து வைத்து வீட்டிற்குள் செல்ல வழி விடாமல் தடுப்பதாகவும் பாதையை அடைத்து வைத்திருப்பது தொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை எனவும், அதனால் பொதுப் பாதைக்கு வழி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக மனு கொடுக்க வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
உடனடியாக அவரிடம் மனுவை பெற்ற கலெக்டர் நாளை காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வரும்படியும் தங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன் பின்பு அந்தப் பெண் மற்றும் அவரது மகளை அங்கிருந்து போலீசார் அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..