ஸ்வீட்டின் மேல் சேர்க்கப்படும் சில்வர் பேப்பர் உடலுக்கு நல்லதா..?
கடைகளில் வாங்கும் ஸ்வீட்டில் சில்வர் கலரில் ஒரு கோட்டிங் இருப்பதை பார்த்திருப்போம். இது அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படுவதா? உடலுக்கு ஆரோக்கியமானதா என பார்க்கலாம் வாங்க.
ஸ்வீட்டின் மேல் பயன்படுத்தப்படும் சில்வர் பேப்பர் பார்க்கும்போதே வாங்கி சாப்பிட வேண்டும் என்ற உணர்வு உண்டாகவும், அழகிற்காகவும் வாங்கி பயன்படுத்துகிறார்கள். இந்த பேப்பரின் பெயர் Vark silver leaf ஆகும். இது தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டு கலரில் கிடைக்கிறது.
இதனை ஸ்வீட்டில் பயன்படுத்தும்போது நீண்ட நாட்களுக்கு இனிப்பு கெடாமல் பார்த்துக் கொள்ளுமாம். நமது உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை ஆகியவற்றையும் அழிக்கும் தன்மை கொண்டது. இது சரும பராமரிப்புக்காகவும் பயன்படுகிறது.
இதில் தற்போது சில்வர் பாயிலுக்கு பதில் அலுமினியம் பாயில் கலக்கப்படுகிறது. அலுமினியம் என்பதால் இதன் விலையும் குறைவாக கிடைக்கும்.
அலுமினிய பாயிலானது ஆபத்து அளிக்கக்கூடியது. இது மூளையை பாதிக்கும், மேலுல் கர்ப்பிணிகள் சாப்பிடும்போது குழந்தைக்கு பாதிப்பு அளிக்கும் வாய்ப்பு உண்டு.
நீங்கள் வாங்கும் ஸ்வீட்டில் சில்வர் பாயிலா அல்லது அலுமினிய பாயிலா என்பதை கண்டறிய, இனிப்பின் மேல் இருப்பதை கையில் எடுத்து உள்ளங்கையில் வைத்து தேய்த்தால் கரைந்து விடுமானால் அது சில்வர் பாயில், ஆனால் தேய்க்கும்போது உருண்டையாக மாறுகிறது எனில் அது அலுமினிய பாயில் என்பதை கண்டுபிடித்து விடலாம்.
மேலும் இந்த சில்வர் பாயில் செய்வதற்கு மாட்டின் குடல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது இதற்கு புதிதாக டெக்னாலஜியும் பயன்படுத்தப்படுகிறது. எனவே இது போன்ற ஆரோக்கியமற்ற உணவு பொருட்கள் வாங்கி சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்ப்பதே மிகவும் நல்லது.