வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா..?
அன்றாடம் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் வெந்நீர் குடிப்பது உடலுக்கு நல்லது இதனை இயற்கையான மருத்துவத்தில் “உஷா பானம்” என்கிறார்கள்.
நமது பெருங்குடல் காலை ஐந்து முதல் ஏழு மணியளவில் முழுமையான இயக்கத்திலிருக்கும், இந்த சமையத்தில் வெந்நீர் குடிக்கும்போது மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகள் இருக்காது.
நாம் குடிக்கும் வெந்நீரில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கும்போது அது உடலுக்கு வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்துக்களை தருகிறது, இதனல உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.
தொண்டை மற்றும் உணவு குழலில் நோய் கிருமிகள் தங்கியிருந்தால் அவற்றை அழிக்க வெந்நீர் சிறந்தது.
வெந்நீர் குடிக்கும்போது குடல்பகுதி விரிவடைந்து நாம் சாப்பிடும் உணவு பொருட்கள் ஈசியாக உள்ளே செல்கிறது.
வெந்நீர் குடிப்பதால் ரத்த குழாய்கள் விரிவடைகிறது. உடலுக்கு நல்ல ரத்தம் கிடைக்கிறது. செல்களுக்கு ஆக்ஸிஜன் சீராக கிடைப்பதால் புத்துணர்ச்சியாக இருக்கும். வெந்நீர் குடிப்பதால் சருமம் பொலிவடையும்.
வெந்நீரை சுட சுட குடிக்க கூடாது, சூடான் நீருடன் சாதாரண நீரையும் கலந்து குடிக்க கூடாது, வெந்நீரை குடிக்கும் பதத்திற்கு ஆறவைத்து மட்டுமே குடிக்க வேண்டும்.