சித்தார்த்-அதிதி க்கு திருமணம் எப்போது?
சித்தார்த்:
பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் சித்தார்த். இந்த படத்திற்கு பிறகு, பெரும்பாலும் தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர், அங்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
சமீபத்தில், மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ள சித்தார்த், கடைசியாக சித்தா என்ற படத்தில் நடித்து கலக்கியிருந்தார்.
உணர்ச்சிபூர்வமாக இருந்த இவரது நடிப்பு, பலரையும் கண்கலங்க வைத்திருந்தது என்றே கூறலாம்.
அதிதி:-
காற்று வெளியிடை , செக்க சிவந்த வானம், சைக்கோ என்று பல்வேறு வெற்றி படங்களில், நடித்து பிரபலம் அடைந்தவர் அதிதி.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் என்று பல்வேறு மொழிகளில் நடித்துள்ள இவர், இரண்டு பாடல்களையும் பாடியிருக்கிறார்.
காதல்:-
நடிகர் சித்தார்த்துக்கும், நடிகை அதிதி ராவ் ஹைதாரிக்கும் ஏற்கனவே விவாகரத்து ஆன நிலையில், இவர்கள் இரண்டு பேரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, இவர்கள் இரண்டு பேரும், அவ்வப்போது ஒன்றாக ஊர் சுற்றி வந்தனர்.
நிச்சயதார்த்தம்:-
இவ்வாறு இவர்கள் இரண்டு பேரும் ஊர் சுற்றி வந்த நிலையில், ஓரிரு மாதங்களுக்கு முன்னர், இவர்கள் திருமணம் செய்துக் கொண்டனர் என்று தகவல் பரவி வந்தது.
ஆனால், அந்த தகவல் உண்மையில்லை என்றும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் மட்டும் தான் முடிந்தது என்றும் சொல்லப்பட்டது.
திருமணம்:-
இப்படி பல்வேறு செய்திகளுக்கும், போராட்டங்களுக்கும் பிறகு, இந்த நட்சத்திர ஜோடி, தற்போது திருமணம் எனும் பந்ததத்தில் இணைய உள்ளார்களாம்.
இந்த திருமணம் எப்போது நடக்க உள்ளது என்ற தகவல், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதன் அடிப்படையில், இவர்கள் வரும் டிசம்பர் மாதம் தான் திருமணம் செய்ய இருக்கிறார்களாம்.
இந்த தகவலை அறிந்த அவர்கள் இரண்டு பேரின் ரசிகர்களும், நட்சத்திர ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-பவானிகார்த்திக்