“நீ பிறந்ததில் நானும் இங்கு தாயாய் பிறந்தேன்..” இணையத்தில் வைரலாகும் அமலாபால் போஸ்ட்..!!
அமலா பால் தமிழ் சினிமாவில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமணம் விவாகரத்தில் முடிந்தது.
அமலா பால் பற்றி ஒரு சிறு தொகுப்பு பார்க்கலாம் வாங்க :
சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். முதல் படம் தோல்வியடைந்தாலும் அந்தப் படத்தின் கதைக்களமும், அமலா பால் ஏற்றிருந்த கதாபாத்திரமும் சர்ச்சைக்குரியதாக இருந்தது.
இதன் காரணமாக அமலா பால் பலரது கவனத்துக்கு உள்ளானார். தொடர்ந்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அப்படி நடித்த மைனா படம் ஹிட்டாக முன்னணி ஹீரோயின் என்ற இடத்துக்கு நகர்ந்துள்ளார்.
அமலா பால் ஏ.எல்.விஜய்யுடன் திருமண வாழ்க்கை; ஏன் முறிந்தது :
தலைவா படத்தில் நடித்தபோது அமலா பாலும் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் காதலித்தனர். பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த ஏ.எல்.விஜய் அமலா பாலை திருமணம் செய்துகொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த சூழலில் திடீரென இரண்டு பேரும் விவாகரத்து செய்தனர்.
அவர்களது விவாகரத்துக்கு காரணமாக பல யூகங்கள் கூறப்பட்டன. ஆனால் அதுகுறித்து இருவரும் அமைதி காக்க ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
அமலா பாலின் கரியர் :
விவாகரத்துக்கு பிறகு படங்களில் நடித்து வந்துள்ளார். இந்தச் சூழலில் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் அமலா பால். கர்ப்பமாக இருந்தபோது ஆடுஜீவிதம் படத்தில் நடித்திருந்தார். அண்மையில் அவருக்கு மகன் பிறந்தார். மகனுக்கு இலை என்று பெயர் வைத்திருக்கிறார்.
இந்நிலையில் அமலா பால் தனது மகன் இலையை கொஞ்சும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் புகைப்படங்களில் தனது மகனை வாஞ்சையோடு கொஞ்சுகிறார் அமலா பால். அதனைப் பார்த்த ரசிகர்கள் அட மகன் இவ்ளோ க்யூட்டா இருக்காரே. சுத்தி போடுங்க அமலா மேடம் என்று கமெண்ட்ஸ் செய்து தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..