இந்தியாவில் வருடாவருடம் கிரிக்கெட் திருவிழா ஐபிஎல் தொடர் வெகு விமர்சையாக நடைபெறும். சென்ற ஆண்டுமுதல் கூடுதலாக இரண்டு அணிகளை சேர்த்து மேலும் ஐபிஎல் தொடரை விரிவுபடுத்தியுள்ளனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வீரர்களை தேர்வு செய்ய ஏலம் நடத்துவது வழக்கமான ஒன்று.
இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடற்காக ஐபிஎல் எலாம் இந்த மாதம் கொச்சியில் வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. கடந்த ஒரு மாதம் வீரர்களின் ஐபிஎல் ஏலத்தில் இணைக்க வலியுறுத்தியிருந்த நிலையில் தற்போது இதற்கான பெயர் பட்டியலை இன்று ஐபிஎல் நிறுவனம் வெளியீட்டுள்ளது. இந்தியா மற்றும் வெளிநாட்டு வீரர்களை கொண்ட இந்த பட்டியலில் மொத்தம் 991 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
991 வீரர்களில் 714 இந்தியா வீரர்களும் 277 வெளிநாட்டு வீரர்களும் தங்களின் பெயர்களை பதிவு செய்துள்ளனர். 14 நாடுகளில் இருந்து பெயர்கள் பெறப்பட்டுள்ளது. ஏலத்தில் அணிகள் ஏற்கவே தனக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துள்ளதால் மொத்தம் 87 வீரர்களை மட்டுமே அணிகளால் வாங்க முடியும். மொத்தமுள்ள 991 வீரர்களில் 185 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடினவர்கள் 786 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடாதவர்களும் 20 வீரர்கள் அஸோஸியேட் நாடுகளை சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவிலிருந்து 57 வீரர்கள், தென் ஆப்பிரிக்காவிலிருந்து 52 வீரர்கள், இங்கிலாந்திலிருந்து 31 வீரர்கள், மேற்கு இந்திய தீவுகளிலிருந்து 33 பேர் மற்றும் நியூஸிலாந்திலிருந்து 27 வீரர்கள் தங்களின் பெயர்களை பதிவுசெய்துள்ளார். உலக புகழ்பெற்ற நட்சத்திர வீர்களான பெண் ஸ்டோக்ஸ், சாம் கரண், கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரான் மற்றும் கேமரூன் கிறீன் போன்ற வீரர்கள் முறையே அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை நிர்ணயித்துள்ளனர். 2 மற்றும் 1.5 கோடி பட்டியலில் இந்தியா வீரர்கள் இடம்பெறவில்லை.
1 கோடி அடிப்படை விலையில் மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், மயங்க் அகர்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் பிராவோ பெயரை பதிவு செய்யவில்லை என்பதால் அவர் ஓய்வு முடிவை அறிவிக்கவாய்ப்புள்ளதாக தெரிகிறது.