சமையல் ராணி ஆக ஆசையா..?
பெண்களுக்கு எலும்பு தேய்மானம் உண்டாகாமல் இருக்க அடிக்கடி உணவில் கேழ்வரகு சேர்த்து கொள்ள வேண்டும்.
அல்வா செய்யும்போது கேரட் பீட்ரூட்டை முதலில் பாலில் வேகவைத்துவிட்டு பின் அல்வா செய்தால் சுவை அதிகமாக இருக்கும்.
இட்லி பொடியில் மல்லி, சீரகத்தை வறுத்து பின் அரைக்க நல்லா வாசனையாகவும் சுலபமாக ஜீரணமும் ஆகும்.
அதிரசம் சுடும்போது இரண்டு கரண்டியின் நடுவில் அதிரசத்தை வைத்து எண்ணெயை பிழிந்து எடுக்க அதிரசம் மென்மையாக இருக்கும்.
ஆம்லெட் செய்யும்போது அதில் ஒரு ஸ்பூன் மைதா கலந்து செய்தால் ஆம்லெட் நன்றாக உப்பி வரும்.
உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்தால் உருளைக்கிழங்கு சீவியதும் அதில் பயத்தம் மாவு தூவி சிப்ஸ் செய்தால் சிப்ஸ் நல்லா மொறுமொறுனு சுவையா இருக்கனும்.
இடியாப்பம் செய்யும்போது அதில் கால் பங்கு பால் மற்றும் முக்கால் பங்கு தண்ணீர் சேர்த்து இடியாப்பம் செய்தால் வெண்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
வெந்தயக்கீரை சமைக்கும்போது அதில் சிறிது வெல்லம் கலந்தால் வெந்தயக்கீரை கசப்பு தன்மை இல்லாமல் சுவையாக இருக்கும்.
அடை செய்யும்போது ஜவ்வரிசியை ஊறவைத்து அடை மாவுடன் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும்.
பஜ்ஜி செய்யும்போது கடலை மாவு மீந்துபோனால் அதில் மைதாமாவு, அரிசி மாவு, வெங்காயம், உப்பு கலந்து தோசை செய்தால் சுவையாக இருக்கும்.