“உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு…” கமல்ஹாசன் கடந்து வந்த பாதை..!!
தமிழ் திரை உலகில் எத்தனை நடிகர்கள் இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே ஜாம்பவான்கள் என அழைக்கப்படுகிறார்கள்.. அப்படி 70ஸ் முதல் 2கே வரை எல்லோருக்கும் பிடித்த நடிகர் கமல்ஹாசன் அவர்களின் 70 வது பிறந்தநாள் இன்று..
இன்றைய நாளில் அவர் கடந்து வந்த பாதை பற்றி பார்க்கலாம்..
சினிமாவில் கால் பதித்தவர்கள் எல்லாம் சினிமாவில் சினிமாவில் சாதித்து விடுவதில்லை..
வெற்றி தோல்வி என எதுவாக இருந்தாலும் அதை எந்த ஒரு கர்வமும் கொள்ளாமல் ஏற்றுக்கொள்ளும் மனம் கொண்டவர்..
கலைத்துறையில் கலங்கரை விளக்காக இருக்கும் நடிகர் கமல்ஹாசன்.. 1960ம் ஆண்டு வெளியான “களத்தூர் கண்ணம்மா” படத்தின் மூலம் அறிமுகமானார்.
அன்று தொடங்கிய அவரது சினிமா வாழ்க்கை இன்று வரை நீடித்துக்கொண்டே இருக்கிறது என சொல்லலாம்..
சினிமாவில் பலரும் கதாபாத்திரமாக நடிப்பது உண்டு ஆனால்., கமல்ஹாசன் அவரை பொறுத்தவரையில் இவர் போடாத வேடம் இல்லை என சொல்லலாம் ..
எந்த வேடம் போட்டாலும் இவருக்கு அப்படியே.. கட்சிதமாக பொருந்தும் என சொல்லலாம்..
குறிப்பாக அவ்வை சண்முகி., தசவதாரம், இந்தியன் போன்ற படங்களில் அவர் போட்ட வேடங்கள் அவரை தவிர வேறு யாருக்கும் பொறுத்தமில்லை என சொல்லலாம்..
அதேபோல்., இவருக்கு புகழமையும், வெற்றியையும் சினிமா எந்த அளவிற்கு கொடுத்திருக்கிறதோ..? அதே அளவிற்கு தோல்வியையும், நெருக்கடிகளையும் கொடுத்திருக்கிறது என சொல்லலாம்..
இவரின் படங்கள் என்றாலே கமர்ஷியல் ரீதியில் வெற்றியடையாது என பல விமர்சனங்களும் உண்டு…
ஒரு படத்தில் வெற்றி கிடைத்துவிட்டால், அதே ஜானரில் இன்னும் 5 படங்கள் நடிப்பவர் அல்ல கமல்ஹாசன்… அந்த வெற்றியில் கிடைத்த லாபத்தை வைத்து சினிமாவில் பரிசோதனை முயற்சி செய்து பார்ப்பவர்.. அந்த தைரியம் இவருக்கு மட்டுமே உண்டு என சொல்லலாம்..
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி., ஹீரோவாக வளம் வந்து., தயாரிப்பாளராக, இயக்குனராக., பாடலசிரியர்.., மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என இன்று சினிமாவிலும் “மக்கள் நீதிமையம்” என்ற கட்சியின் மூலம் அரசியலிலும் பயணித்துக் கொண்டிருக்கும் “கமல்ஹாசன்..” இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்..