ஜம்மு காஷ்மீர் பஹால்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டது ஹாசிம் மூசா என்ற பாகிஸ்தானி. இவர், பாகிஸ்தான் ராணுவத்தின் எஸ்.எஸ்.ஜி என்று அழைக்கப்படும் பாரா கமெண்டராக பணியாற்றியவர். பின்னர், அங்கிருந்து லஸ்கர் இ தொய்பாவில் இணைந்துள்ளார். ஹாசிம் மூசா உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு 15 உள்ளுரை சேர்ந்த காஷ்மீரிகள் உதவியதாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த 2023ம் ஆண்டு ஹாசிம் மூசா இந்தியாவுக்குள் நுழைந்துள்ளார். கடந்த இரு வருடங்களாக ஜம்மு காஷ்மீரில் சில தாக்குதல்களை நடத்தியதாக சொல்லப்படுகிறது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ- க்கும் பஹால்காம் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. காஷ்மீரிகள் இல்லாத வேறு மாநிலத்தவர்கள் அங்கு சென்றால், அவர்களை குறி வைத்து ஹாசிம் தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்த நிலையில், முன்னாள் ராணுவ வீரர் மேஜர் மதன்குமார் என்பவர் கூறியதாவது, பஹால்காம் சம்பவத்துக்கு பின்னால் இருந்து இயங்கியது அசிம் முனீர். இவர்தான் பாகிஸ்தான் ராணுவ தளபதி. ராவல்பிண்டிதான் பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் உள்ளது. இந்த ராவல்பிண்டியைதான் இந்தியா தாக்க வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்கினால் வேலைக்கு ஆகாது.பஞ்சாப்பில் அடிக்காத வரை, ராவல்பிண்டியில் அடிக்காத வரை எதுவும் ஆகாது. அதற்கெல்லாம் நம்மிடம் பவர் இருக்கிறது. ராவல்பிண்டியில்தான் தாக்குதல் முதலில் நடக்க வேண்டும். பிரம்மோஸ்க்கு பதிலடி தர அவர்களிடம் ஆயுதங்கள் இல்லை. தடுப்பு ஏவுகணைகளும் கிடையாது.