வடசென்னையின் கிங் யார்..? அந்த அரசனை இவருக்கு தானா..!! உண்மையை சொன்ன மக்கள்..!!
வட சென்னை என்று சொல்லப்படும் ஆர்.கே.நகர் தொகுதி என்றால் ஒரு தனி கெத்து தான் காரணம், மறைந்த தலைவர் அதிமுக முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து 10 ஆண்டு முதலமைச்சராக வெற்றி பெற்றவர்.
வட சென்னை மக்களவைத் தொகுதிகளான, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, வியாசார்பாடி, திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம், பெரம்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளது.
இத்தொகுதியில் 7 லட்சத்து 30 ஆயிரத்து 395 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 65 ஆயிரத்து 286 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தர்கள் 543 பேர் என மொத்தம் 14 லட்சத்து 96 ஆயிரத்து 224 வாக்காளர்கள் உள்ளனர்.
வட சென்னை மக்களவைத் தொகுதி உருவானதிலிருந்து நடைபெற்ற தேர்தல்களில் திமுக 11 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஒருமுறை கூட பாஜக வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே வட சென்னையின் கோட்டை என்றால் அது திமுகவின் கோட்டை என்று சொல்லலாம்..
இதனால் தற்போதைய லோக்சபா தேர்தலில் இந்த தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. அதாவது தற்போது திமுக வசம் உள்ள இந்த தொகுதியை கைப்பற்றி “வடசென்னை கிங்” என்ற பெயர் யாருக்கு என்ற எதிர்பார்ப்பே தற்போது மக்களிடம் அதிகரித்துள்ளது.
வட சென்னை தொகுதியில் திமுக சார்பில் கடந்த முறை வெற்றி பெற்ற வேட்பாளர் கலாநிதி வீராசாமி, இந்த முறையும் போட்டியிடவுள்ளார்.., வட சென்னை மேம்பாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் 4 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளார்.
எனவே கடந்த 3 ஆண்டுகளில் திமுக செய்த சாதனைகள் குறித்தும்.., இதுவரை நிறைவேற்றிய வாக்குறுதிகளான. இலவச மகளிர் பேருந்து மற்றும், மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை, 6000 ரூபாய் வெள்ள நிவாரண நிதி தொகை மற்றும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுதிட்டம் போன்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்தும் அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
குறிப்பாக, வட சென்னையில் ஐடி நிறுவனங்களை கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
வடசென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள டாக்டர் அமுதினி, மத்திய – மாநில அரசுகளை விமர்சித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமின்றி, வேறு எந்தக் கட்சியிலும் இல்லாத வகையில், நாம் தமிழர் கட்சியில் மட்டுமே பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால், அனைத்திலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி செயல்படுத்திக் காட்டுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன், பெண்களுக்கான இட ஒதுக்கீடு, பெண்களின் பாதுகாப்பு போன்ற திட்டங்களை செயல்படுத்துவோம் என கூறி வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.
வடசென்னை தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவினாலும். தற்போது திமுகவின் கோட்டையாக உள்ள இத்தொகுதியில் வருங்கால “வடசென்னை கிங்” யார் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இவர் கடந்த சில நாட்களாகவே தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின்போது, தான் இருமுறை மாமன்ற உறுப்பினராக பணியாற்றியதாகவும், அதிமுக அரசின் 10ஆண்டு கால சாதனைகள் குறித்தும், வட சென்னையில் அதிமுக அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
ஆனால் அதில் வேடிக்கை தரும் விதமாக, பிரச்சாரம் மேற்கொண்டு இருக்கும் போது, உங்களின் வாக்குகளை இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்பதற்கு பதிலாக, கை சின்னத்தில் என கூறியுள்ளார். பின் அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள் கூச்சலிட்ட பின், நான் வேட்பாளரின் கையை நகர்த்த சொன்னேன் என கூறி சமாளித்து வேடிக்கை அளிக்கும் விதமாக இருந்துள்ளது.
மேலும், ரயில்வே முனையம் அமைப்பது, போட்டித் தேர்வு பயிற்சி மையம் அமைத்தல், ரயில்வே கடவுப் பாதையில் மேம்பாலம் உட்பட 30 வாக்குறுதிகளை நிறைவேற்ற உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.
பாஜக வேட்பாளர் பால்கனகராஜ் தனது பிரச்சாரத்தை நாளை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்றைய முன்தினம் திருவொற்றியூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்..,
அதன்பின் கூட்டணி கட்சிகளான தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பெரம்பூர் பகுதியில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், ‘‘பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்துள்ளது.., இந்த வளர்ச்சி தொடர வேண்டும் என்றால், 3-வது முறையாக பாஜக வெற்றி பெற்றால் இந்தியா வல்லரசு நாடக மாறிவிடும்.
தமிழகத்தில் வீட்டு வரி , சொத்து வரி, பத்திரப் பதிவு கட்டணம், மின் கட்டணம், பால் விலை, விலைவாசி உயர்வு அதிகரித்து கொண்டே வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் நம் தலைவர் மோடியால் மட்டுமே முடியும். எனவே பாஜகவிற்கு வாக்களித்து எங்களை வெற்றி பெற செய்தால் விலைவாசி குறையும் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இதை பற்றி நம் மதிமுகம் பத்திரிக்கையாளர் கொருக்குப்பேட்டை டூ திருவொற்றியூர் வரையிலான மக்களிடம் சர்வே எடுக்கையில் அவர்கள் சொன்ன பதில். பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது திமுக அரசு மட்டுமே, கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளபாதிப்பில் நாங்கள் தவித்த போது உதவியது திமுக மற்றும் நாதக. எனவே வருகின்ற தேர்தலில் எங்களின் முழு ஆதரவு இவர்கள் இருவருக்கு மட்டும் தானே தவிர வேறு யாருக்கும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..