யாம் இருக்க பயம் ஏன்..! முருகபெருமானுக்கு வைகாசி விசாகம்
சந்திரன் முழு ஒளியோடு தென்படும் நாளே பெளர்ணமி, அன்று இறைவனை வழிபாடு செய்தால் மனம் நிறைவுடனும், வாழ்க்கை என்று பொலிவுடனும் இருக்கும் என்பது ஐதீகம். அதிலும் முருக பெருமானுக்கு விசாகம், கார்த்திகை மற்றும் உத்திர நட்சத்திரங்கள் பெளர்ணமி நாளன்று வரும்.
இந்நாளில் முருக பெருமானை வழிபட்டால் வளமான வாழ்க்கை கிடைக்கும்.
இன்று வைகாசி விசாகம் என்பதால், உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
முருகனின் ஆறுபடை வீடுகளிலும் .., பக்தர்கள் பால்குடம் எடுத்து வேல் குத்தி நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
எந்த கடவுளுக்கும் இல்லாத சிறப்பு முருகருக்கு உண்டு என்று அனைவரும் சொல்லுவார்கள் காரணம். குழந்தை வேலன், குமரன், அயோதிகன் என பல வடிவங்களில் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதால்.
* குழந்தை வேலனை வணங்கினால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும்.
* குமரனை கன்னி பெண்கள் வணங்கினால் விரைவில் திருமணம் நடக்கும்.
* அயோதிகனை முதியவர்கள் வணங்கினால் நோய் நொடி இன்றி இருப்பார்கள்.
* ராஜ அலங்காரத்தில் முருகன் காட்சி கொடுக்கும் பொழுது வணங்கினால் செல்வம் செழிக்கும்.
* பால முருகனை வணங்கினால் கஷ்டங்கள் தீரும்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்